யாழ் – பருத்தித்துறை வீதியில் மீட்கப்பட்டன ஆயுத பாகங்கள்!

பருத்தித்துறை, யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஆயுத உதிரிப் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த வீதியின் வல்லை பாலத்தின் கீழ் இவை துருப்பிடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. பாலத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்கள் இவற்றை கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

குடியரசு தேர்தல்: வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம்!

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலானது வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் குறித்து டெல்லியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறுவதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த போராட்டத்தில் நாம் நிச்சயம் போராட வேண்டும் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். குறுகிய மனப்பாங்கு, நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலை […]

Continue Reading

காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா கண்கானிக்கிறது!

இலங்கையில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து ஐ.நா அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தெரிவித்துள்ளார். இது விடையத்தில் இலங்கை அரசாங்கம் மறந்து போனாலும் ஐ.நா.வில் உள்ள மக்களும், அதிகாரிகளும் மறக்கவில்லை எனவும் ஆயர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றைய தினம் (17.07.2017) இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்தார். சொன்னவற்றை எல்லாம் இலங்கை அரசாங்கம் செய்கின்றதா என்பதனை ஐ.நா. தரப்பினர் அவதானித்துக் […]

Continue Reading

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என். விந்தன் கனகரத்தினம்!

வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சராக என். விந்தன் கனகரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பரிந்துரைக்கான கடிதம் இன்று (17.07.2017) கட்சியின் செயலாளர் நாயகத்தினால் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான உயர்மட்ட கலந்துரையாடல் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் வவுனியாவில் நேற்றைய தினம் (16.07.2017) நடாத்தப்பட்டுள்ளது. இதனிடையே டெனிஸ்வரனின் பதவி நீக்கம் குறித்து முதலமைச்சர் இதுவரையில் தன்னுடன் கலந்துரையாடவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் […]

Continue Reading

பாகிஸ்தானின் தாக்குதலில் 7 வயதான சிறுமி பலி!

பாகிஸ்தான் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 7 வயதான சிறுமியும் இந்திய இராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் எனும் இடத்தில் இந்திய இராணுவ முகாம்களை குறிவைத்து இந்த தாக்கதல் இடம்பெற்றுள்ளது. இன்று (17.07.2017) இடம்பெற்றிருக்கும் குறித்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்திய மோட்டார் குண்டே இவர்களின் உயிரை பறித்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அதேவேளை ரஜோரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை […]

Continue Reading

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் விளக்க மறியலில்..!

முன்னாள் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரை எதிர் வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை பதில் நீதவானின் முன்னிலையில் நேற்றைய தினம் (16.07.2017) முற்படு;த்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையின் பிரதான சந்தேக நபரை காப்பாற்றுவதற்கு முற்பட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரும்இ தற்போதைய மத்திய மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா […]

Continue Reading

பிரபாகரன் தப்பியதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை! -ரொபேர்ட் ஓ பிளேக்-

பிரபாகரனை தப்பிக்கச் செய்வதற்கு உதவியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் கட்டுக்கதை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்தாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சாரா குழுவுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. விடுதலை புலிகளின் கப்பல்களை தாக்கி மூழ்கடிப்பதற்கு அமெரிக்கா உதவி புரிந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ரொபேர்ட் ஓ பிளேக் மறுத்துள்ளார். ஆயினும் கப்பல்கள் உள்ள இடம் குறித்து […]

Continue Reading

தமிழீழ விடுதலை  இயக்கத்தினுள் சட்டம் மோதுகிறதா?

ரெலோ கட்சிக்கென ஏதாவது யாப்பு விதிகள் இருந்தால் ஒருவாரத்திற்குள் தனக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரியுள்ளார். ரெலோ கட்சியின் செயலாளர் ந. சிறிகாந்தாவினால் அணுப்பப்பட்டுள்ள கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே அமைச்சர் இதனை கேட்டுள்ளார். கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயற்பட்டுள்ளதால் கட்சி அமைப்பு விதிகளின் பிரகாரம் உங்களுக்கு எதிராக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது? என ரெலோ கட்சி கேட்டுள்ளது. அதற்கான காரணங்கள் இருந்தால் எழுத்து மூலம் அவற்றை அறிவிக்குமாறும் அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. […]

Continue Reading