கண்டி வீதியில் விபத்து – வாகன நெரிசல்

கேகாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கேகாலை, மிபிட்டிய, கரடுபண பிரதேசத்தில் இன்று காலை லொறிகள் இரண்டும் வேன் ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கேகாலைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிசார், விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

வவுனியா மூன்றுமுறிப்பில் விபத்து இருவர் படுகாயம்

வவுனியா மூன்றுமுறிப்பு எனும் பகுதியில் இன்று (01) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற லொறியொன்று பழுதடைந்த நிலையில், வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இச் சந்தர்ப்பத்தில், யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டொல்பின் ரக வானொன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வானில் சாரதியும், லொறியை பழுதுபார்த்துக் கொண்டிருந்தவருமே காயமடைந்துள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

அம்பாறை கல்முனை வீதியில் இருந்து விலகியது பேரூந்து

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, அம்பாறை கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனும் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமார் 35 பயணிகள் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து வாழைச்சேனை நோக்கி, பயணித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் சம்மாந்துறை, அம்பாறை மற்றும் கல்முனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

கோப்பாயில் விபத்து – வயோதிபர் பலி

யாழ். கோப்பாய் கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பணித்தவருடன் பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபர் ஒருவர் தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோப்பாய் கைதடி வீதியிலுள்ள இராணுவ முகாம் முன்பாக நேற்றிரவு தென்னிலங்கை நிறுவனம் ஒன்றின் பார ஊர்தியுடன் கைதடி வீதி வழியாக சென்று கொண்டிருந்த வேளையிலேயே விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் தலை சிதறி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவத்தில் சபாபதிப்பிள்ளை இரத்தினகோபால் (வயது 67) என்னும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கோப்பாய் […]

Continue Reading

ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடமாகாண சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே வலியுறுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரே மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில், இன்று (03) சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. வடமாகாண […]

Continue Reading