ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் – 50ற்கும் அதிகமானோர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், வடக்கு பகுதியில் அமைந்துள்ள சரிபுல் மாகாணத்திலுள்ள மிர்ஸா ஒலங் என்ற பகுதியை அண்டிய பகுதியில் இருந்த பாதுகாப்பு சோதனை சாவடியை இலக்குவைத்து கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ள அதேவேளை, குறித்த பகுதியிலுள்ள 30க்கும் அதிகமான வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலின் போது ஆப்கான் பாதுகாப்பு படையை சேர்ந்த 07 பேர் […]

Continue Reading

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் – 26 படையினர் பலி

ஆப்கானிஸ்தானின் கந்தகஹார் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றினுள் புகுந்து தலிபானியர்கள் நடத்திய தாக்குதலில் 26 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது. அத்துடன், மேலும் 13 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, கந்தஹாரின் காக்ரெஸ் பகுதியிலுள்ள குறித்த முகாம் தற்போது தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக தலிபானியர்கள் அறிவித்துள்ளனர். அண்மைக்காலங்களில் இராணுவத்துக்கு எதிரான தலீபான் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் இராணுவம் பெரும்பாலும் தோல்வி கண்டு வவருவதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading