நீதித்துறை மீதான அச்சுறுத்தலை கண்டித்து திருகோணமலையில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கருதப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை கண்டித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”நல்லூர் கந்தசுவாமி ஆலய தென்மேற்கு வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், நீதிபதி இளஞ்செழியனை காப்பாற்ற முயன்ற அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் காயமடைந்துள்ளார். இந்தச் […]

Continue Reading

நீதியமைச்சர் நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு!

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நீதிக்கு புறம்பாக செயற்படுவதாக அரசியல் கைதிகள் குற்றம் சாட்டுவதாக அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பு- மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தாம் சந்தித்த போது அவர்கள் தெரிவித்தாக அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நீதி இருக்குமாயின் அதற்கு உட்பட்டு அரசியல் தீர்மானம் ஒன்றின் பேரில் தம்மை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கம், அரசியல்வாதிகள் என அனைவராலும் தாம் கைவிடப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், சமய […]

Continue Reading