பாடசாலை மாணவர்களுக்குக் காப்புறுதி

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் சில வாரங்களில் அது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இதனூடாக பாடசாலை மாணவர்களுக்கு பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்றும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த திட்டத்தின் கீழ் அறநெறி கல்வியை பயிலும் பௌத்த தேரர்களையும் காப்புறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி நோய் காரணமாக தங்கி சிகிச்சை பெறும் பௌத்த தேரர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா வீதம் 30 நாட்கள் வரை […]

Continue Reading

நல்லாட்சி அரசு நாட்டை முன்னகர்த்தி வருகிறது – கல்வியமைச்சர்

தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, நாடு முன்னோக்கி கொண்டு செல்லப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். குருநாகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஊடக சுதந்திரத்தை உயர்ந்தளவில் உறுதி செய்ய அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

நாட்டைக் குழப்புவதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள் – கல்வியமைச்சர் குற்றச்சாட்டு

புத்த தர்மம் மற்றும் நாட்டிலுள்ள கட்டளைச் சட்டத்தின்படி செயற்பட்டுக் கொண்டிருக்கும் போது, விடயங்களை திரிவுபடுத்தி அடிப்படையற்ற கருத்துக்களை பரப்புவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கும் விடயமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன், இடம்பெற்ற ஊழல், மோசடிகளை மறைக்கும் நோக்கில் மக்களின் அவதானத்தை திசை திருப்புவதற்கு சிலர் முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இவ்வாறான பிரசாரங்கள் ஊடாக நாட்டின் பௌத்த பாரம்பரியத்தை வீழ்த்தும் திட்டம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுவதாக […]

Continue Reading

இயற்கை அனர்த்தங்களால் 44 மாணவர்கள் உயிரிழப்பு

இயற்கை அனர்த்தங்களினால், சப்ரகமுவ, தென் மற்றும் மேல் ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த 44 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 08 மாணவர்களைக் காணவில்லையென கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கல்வியமைச்சில் நேற்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததுடன், இந்த அனர்த்தங்களினால் 144 பாடசாலைகள் சேதடைந்துள்ளதாகவும், அதில் 74 பாடசாலைகள் முழுமையாகவும் 70 பாடசாலைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், 7,850 மாணவர்கள் நிர்க்கதியாகி உள்ளதுடன், 72 பாடசாலைகள் […]

Continue Reading

சகல பரீட்சைகளும் இரத்து

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் நாளை, நாளை மறுதினம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நாளைய தினம் நடைபெறவிருந்த பொது நிர்வாக சேவை பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading