அமெரிக்காவை அதிரடியாக எச்சரித்தது வடகொரியா

அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், தன்மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் புதிய பொருளாதார தடைவிதிக்க காரணமான அமெரிக்காவின் குவாம்தீவின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோமென வடகொரியா அதிரடியாக அறிவித்தது. இந்த அறிவிப்புத் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் மீதான பிரச்சினையில் இராணுவ தீர்வு காண்பதற்கு போர்த் தளபாடங்களையும், ஆயுதங்களையும் லோடு ஏற்றியாகி விட்டது, வடகொரியா தனது பாதையை மாற்றிக்கொள்ளாவிட்டால் தாக்குதல் நடத்தப்படுமென எச்சரித்திருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் […]

Continue Reading

அமெரிக்காவுக்கு வடகொரியா மீண்டுமொரு எச்சரிக்கை

அமெரிக்க பசுபிக் பிராந்தியமான குவாமில் ஏவுகணை தாக்குதலொன்றை நடத்த பரிசீலித்து வருவதாக வடகொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வடகொரிய இராணுவத்தின் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாம் பகுதியில் நீண்டதூரம் சென்று தாக்கும் ராக்கெட்களை வீசும் திட்டம் ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாகவும், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான இந்த தகவல் பரிமாற்றம் இருநாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை தீவிரமாக […]

Continue Reading

அமெரிக்காவைக் கடுமையாக எச்சரித்தது வடகொரியா

தமது நாட்டின் மீது புதிய பொருளாதார தடையினை ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்கொண்ட அமெரிக்காவிற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென வடகொரியா எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இறையாண்மைக்கு பங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட அமெரிக்காவிற்கு தகுந்த பாடம் புகட்டப்படும் எனவும், பொருளாதார தடையின் மூலம் அணு ஆயுத திட்டம் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் திட்டமிட்டது போன்று முன்னெடுக்கப்படும் எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது. இதனிடையே, மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து தென்கொரியாவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை வடகொரியா முற்றாக நிராகரித்துள்ளது. […]

Continue Reading

வடகொரியாவின் எதிரியல்ல – அமெரிக்கா

வடகொரியாவில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டுமென்று தாங்கள் கோரவில்லையென அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ரெக்ஷ் தில்லர்சன் தெரிவித்துள்ளார். வடகொரியா மேற்கொண்டு வருகின்ற அணுவாயுத சோதனைகளால் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தீவிர முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்கா வடகொரியாவின் எதிரியில்லை. அந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ, அரசாங்கத்தை குழப்பவோ, வட, தென் கொரியாக்களை விரைவாக இணைக்கவோ அழுத்தம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் வடகொரியாவுக்கு அமெரிக்கா அச்சுறுத்தலான நாடும் […]

Continue Reading