அமெரிக்காவை சூறையாடிய கடும் புயல்

அமெரிக்காவில் கடந்த 12 ஆண்டுகால வரலாறு காணாத பெரும் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு சுமார் சுமார் 210 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிவந்த இந்த பெரும் புயல் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11.00 மணியளவில் அரன்சாஸ் மற்றும் ஓகோன்னோர் துறைமுகங்களுக்கு இடையே டெக்சாஸ் மாநிலத்தின் தென்பகுதியை உலுப்பியெடுத்துள்ளது. அதிகாலை 2.00 மணியளவில் சீற்றம் தணிந்து மணிக்கு 125 மைல் வேகத்தில் வலுவிழந்த ஹார்வே புயல் டெக்சாஸ் மாநிலத்தின் பல பகுதிகளை துவம்சம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் […]

Continue Reading

வடகிழக்கில் புத்தர் சிலை எழுவதற்கு அமெரிக்கா எதிர்ப்பு

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை நிர்மாணிப்பது தொடர்பில் அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையிலேயே இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த குழுக்கள் மற்றும் இராணுவத்தினரால் வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு ஏகாதிபத்தியக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற அமைப்புகள், அரசியல்வாதிகளினால் தகவல் […]

Continue Reading

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்

அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, புதிய தடைகளை விதிக்க முயற்சிக்குமாயின், தமது நாட்டின் அணு ஆயுத பலம் காண்பிக்கப்படுமென ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி எச்சரித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஈரான் தமது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டிருந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஈரான் பரிசோதித்ததாக தெரிவித்து, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானின் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், […]

Continue Reading

அமெரிக்காவின் தடைவிதிப்பு வெனிசுலா ஜனாதிபதி மீது பாய்ந்தது

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு அமெரிக்க நிர்வாகம் தடை விதித்துள்ளதுடன், மதுரோ ஒரு சர்வாதிகாரி என்றும் அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்ததுடன், தேர்தலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடாத்தப்பட்ட அதேவேளை, சில இடங்களில் வாக்குச்சாவடிகள் […]

Continue Reading

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கலந்து கொண்ட  கூட்டு கடற்பயிற்சி நிறைவு!

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடற்படையினரின் கூட்டு கடற்பயிற்சி நேற்று முன்தினத்தடன் (17.07.2017) நிறைவு பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன. வங்கக்கடலில் இடம்பெற்ற இந்த கூட்டுப்பயிற்சி இரண்டு வருடடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வருகின்றது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் இடம்பெறும் இப்பயிற்சிக்கு ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான பயிற்சி கடந்த 7 ஆம் திகதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்துள்ளது. இறுதி தினத்தன்று சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 150 கடல் மைல் […]

Continue Reading

350 மில்லியன் ரூபாவை வழங்கியது அமெரிக்கா

கடந்தவாரம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மணிசரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 350 மில்லியன் ரூபா நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்நிகழ்வின் போது, கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், தேவைப்படும் போதெல்லாம் அமெரிக்க மக்களும் இலங்கை மக்களும், எப்போதும் அருகருகே இருப்பார்களெனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அமெரிக்காவிலிருந்து திரும்பும் விமானங்களில் மடிக்கணனிகளுக்குத் தடை

அமெரிக்கா சென்று திரும்பும் அனைத்து விமானங்களிலும் மடிகணனி கொண்டுச் செல்ல விரைவில் தடைவிதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜோன் கெல்லி தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள சகல விமான நிலையங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அமெரிக்கா வந்து செல்லும் அனைத்து விமானங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அமெரிக்க மக்கள் உள்ள விமானங்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் துருக்கி ஆகிய 10 விமான நிலையங்களில் இருந்து மடிக்கணனிகளை […]

Continue Reading