மிலேனியம் குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரரை சந்தித்துள்ளனர்@

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். இந்த நிகழ்வு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகர் டிசால் டி மெல்லும் இதில் கலந்துகொண்டனர்.

Continue Reading

இலங்கை – ஜப்பான் இடையேயான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பணிப்பெண்களின் நலன்கருதி புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இவ் உடன்படிக்கை(26) கைசாத்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் சர்வதேச மனித வள அபிவிருத்தி (M JAPAN ) நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. சர்வதேச மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் Kyoki Yanagisawa வும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் இவ் ஒப்பந்ததில் கைசாத்திட்டனர். அதற்கமைய இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் […]

Continue Reading