கட்டிடங்கள் தொடர்பில் கடினமான சட்டங்கள் தேவை – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா

கட்டிடங்கள் குறித்த சட்ட திட்டங்கள் எதிர்காலத்தில் கடுமைப்படுத்தப்பட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா வலியுறுத்தியுள்ளார். ஆபத்தான பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களே பாரிய அனர்த்தங்களுக்கு காரணம். நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகளிலும், உரிய ஆலோசனைகளின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்களே நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே கட்டிடங்கள் தொடர்பான சட்டத்தை கடுமைப்படுத்த வேண்டும் என்பதுடன், கொழும்பிலுள்ள 10 ஆயிரம் சட்டவிரோத கட்டிடங்கள் உள்ளிட்ட, நாட்டின் அனைத்து சட்டவிரோத கட்டிடங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் பாரிய […]

Continue Reading

அபாய வலயத்திலுள்ள மக்களை கட்டாயமாக வெளியேற்றும் சட்டம் இலங்கைக்குத் தேவை

அபாய வலயத்திலுள்ள மக்களை வீடுகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் சட்டம் இலங்கைக்குத் தேவை, அதனைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், மண்சரிவு அபாய வலயத்திலுள்ள மக்கள் கடும் மழை பெய்யும் போது, அது தொடர்பில் அவதானமின்றி வீட்டுக்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். இதனால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மண்சரிவு அபாய வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களிலுள்ள வீடுகள் […]

Continue Reading

பொறுப்புத் தவறியிருப்பின் வளிமண்டலவியல் திணைக்களம் மூடப்பட வேண்டும்

வழங்கப்பட்ட பொறுப்பிலிருந்து தவறியிருந்தால் வளிமண்டலவியல் திணைக்களத்தை மூடிவிட வேண்டுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அரச திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த வாரம் நாட்டில் திடீரென ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் நாடு பாரிய இன்னலுக்கு முகங்கொடுத்துள்ளது. இது குறித்து அறிவிக்கவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மீது குற்றஞ்சாட்டப்படுகின்ற போதிலும், அது எமது தவறல்ல. இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் உரிய அறிவித்தலை விடுக்கவில்லை. இவ்வாறு […]

Continue Reading

பிரதியமைச்சரின் செயற்பாடு சிறப்பானதே – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா

காலநிலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொள்ள தான் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்த நிலையில், அனர்த்தக் காலத்தில் பிரதியமைச்சர் துனேஷ் கங்கந்த, சிறப்பாகவே செயற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், கடந்த சில நாட்களாக நாட்டில் தான் இருக்கவில்லை. இந்த மாநாடு 4ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், […]

Continue Reading