தடைசெய்யப்பட்ட இரசாயனத்துடன் இந்தியப் பிரஜைகள் கைது

தடைசெய்யப்பட்டுள்ள இரசாயனத்துடன் இந்திய பிரஜைகள் மூன்று பேர் மன்னார் வடக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களிடமிருந்து 1,125 கிலோகிராம் அமோனியம் சல்பேட் கிளைஸ்போட் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

மேல் மாகாணத்தில் 113 பேர் கைது

மேல் மாகாணத்தில் கடந்த 26, 27ஆம் திகதிகளில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டிய 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தங்கம் கடத்தியவர்கள் கைது – கட்டுநாயக்கவில் சம்பவம்

ஒரு தொகை தங்கத்தை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முற்பட்ட நான்கு நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 23, 24 மற்றும் 38 வயதுடைய இந்தியர் ஒருவரும் மூன்று இலங்கையர்களுமே இவ்வாறு இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 387.81 கிராம் நிறையுடைய தங்கம் இதன்போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 2,132,955 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. கடத்த முற்பட்ட தங்கக்கட்டிகள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களில் ஒருவருக்கு 10,000 ரூபா படி […]

Continue Reading

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

50 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்றிரவு மருதானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பாரவூர்தியில் இரகசியமான முறையில் வைக்கப்பட்டு, குறித்த சிகரெட் தொகை கொண்டு செல்லப்பட்டபோது, சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த சிகரெட்டுக்கள் டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவ சென். விஜயன்ஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்ததுடன், மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு சில உபகரனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இரண்டு பேரும் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

சூதாடிய எண்மர் கைது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் சூதாடிய குற்றச்சாட்டில் 08 பேர், நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிண்ணியா, திருகோணமலை, பூவரசந்தீவு, குட்டிக்கராச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர்கள், இரவு வேளைகளில் சூது விளையாடி வருவதாகப் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

தங்கத்துடன் இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக ஒருதொகை தங்கத்தை சென்னைக்கு கடத்த முற்பட்ட இரு இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடருந்து சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கங்களை விமான நிலைய சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டெல்லியில் இலங்கையர் கைது

போலி விமானச் சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமது தாயாரை வழியனுப்ப வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைதாகியுள்ளார். இந்தியாவின் விமான சேவைகள் சட்டத்தின்படி, தகுதியான விமானச்சீட்டுகள் இல்லாமல் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியாது. இந்நிலையில் அவர் தமது இரத்து செய்யப்பட்ட விமான சீட்டைக் கொண்டு விமான நிலையத்துக்குள் பிரவேசித்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் அனுமதி!

அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது (சி.சி.டி) என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்று (24) கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) அனுமதித்தார். சுகாதார அமைச்சுக்குள்அத்துமீறி நுழைந்து 870, 227 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்யவதற்காக, கொழும்பு குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே […]

Continue Reading

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் பொகவந்தலாவ டின்சின் கேசல்கமுவ ஒயாவிற்கு அருகாமையில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிசாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ள பொலிசார், சந்தேகநபர்கள் ஐவரையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை […]

Continue Reading

உள்நாட்டு மீனவர்கள் 21 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட உள்நாட்டு 21 பேர் இருவேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலாவெளி, பர்விதீவுக்கு அருகிலுள்ள பரப்பில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 15 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய 2 டிங்கி படகுகளும், 220 மீற்றர் நீளமான தடைசெய்யப்பட்ட 2 வலைகளுடன், 319 கிலோ மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், […]

Continue Reading

சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த சீன பிரஜை ஒருவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்படடுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட வீஸா பத்திரமின்றி தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும், இவ்வாறு கைது செய்யப்பட்ட 46 வயது மதிக்கத்தக்க குறித்த சீன பிரஜை தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading