இடையூறு ஏற்படுத்திய பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கைது!

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருளை கொண்டுசெல்வதை தடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் சுமார் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் தாங்கிகளை மறித்தும், விமான நிலையத்திற்கு எரிபொருள் கொண்டுசென்ற ரயிலை மறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பெற்றோலிய வளத்துறை ஊழியர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலன்னாவ எண்ணெய் களஞ்சியசாலையிலிருந்து 15 எரிபொருள் தாங்கிகள் விடுவிக்கப்பட்டு வெளியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

கொழும்பில் சிக்கின ‘நடன குளிசை’ போதை மாத்திரை!

‘நடன குளிசை’ எனும் பெயரில் விநியோகிக்கப்பட்ட போதை மாத்திரைகள் சில கொழுப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. இரவு விடுதிகளில் இடம்பெறும் வைபவங்களில் பங்கேற்போருக்கு இவை விநியோகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் நாற்பத்தைந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கிராண்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாத்திரை ஒன்று சுமார் நான்காயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் (19.07.2017) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட குறித்த மாத்திரைகளின் பெறுமதி ஒரு இலட்சத்து என்பது ஆயிரம் ரூபாய்கள் […]

Continue Reading

கசிப்பு வைத்திருந்த இருவர் கைது – கோப்பாயில் சம்பவம்

கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கணவன் மற்றும் மனைவி கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைப் பிராய் பகுதியில் கணவன் மற்றும் மனைவி இருவரும் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளனர். கசிப்பு உற்பத்தியை தடுக்க பொது மக்கள் கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அந்த தகவலின் பிரகாரம், குறித்த நபர்களின் வீட்டினை நேற்று வியாழக்கிழமை சுற்றிவளைத்த பொலிஸார், ஒரு லட்சத்து 61 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு மற்றும் 25000 […]

Continue Reading

புதையல் தோண்டியவர்கள் கைது

நாகரீக வளர்ச்சியடைந்துவரும் தற்போதைய காலகட்டத்திலும், சில மூடநம்பிக்கைகளை எமது மக்கள் செயற்படுத்தி வருகின்றநிலை காணப்படுகின்றது. அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கொஸ்கொல்ல பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஸ்கொல்ல காட்டுப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட நிலையிலேயே நேற்று இரவு குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தொல்பொருள் பாதுகாப்புப் பிரிவின் கிழக்கு மாகாணப் பொறுப்பதிகாரி நளின் வீரரத்ன தெரிவித்தார். குறித்த கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபர்களிடமிருந்து பூஜைப் […]

Continue Reading