வவுனியாவில் வர்த்தகர் மீது வாள்வெட்டு

வவுனியா, கல்மடு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 10.20 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் குறித்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாள் சகிதம் வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

கொடிகாமத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் மீது தாக்குதல்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அலுவலகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் அலுவலகர் தனது கடமை முடிந்து வடமராட்சியில் உள்ள அவது வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் சென்ற போது வரணி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத குழுவினரின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு பின் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் […]

Continue Reading

இளஞ்செழியன் மீதான தாக்குதல் முயற்சி தொடர்பில் மூன்று பேர் கைது!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் கோவில் வீதிப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைதானவர்களில் இருவர் உடன்பிறந்த சகோதரர்கள் எனவும் மற்றயவர் அவர்களது ஒன்று விட்ட சகோதரர் எனவும் தெரிய வருகிறது. எனினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் பொலிஸாரினால் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கிளிநொச்சியில் அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கிளிநொச்சியில் கல்வீச்சு மேற்கொள்ளப்படடுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் குறித்த கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதும் பயணகளிற்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

செட்டிகுளத்தில் ஆசிரியர் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செட்டிகுளத்தில் முதலியார்குளம் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை கைது செய்யமாறு வழியுறுத்தப்பட்டுள்ளது. தாக்குதல் ச்மபவத்தை கண்டித்து இன்று பாடசாலையின் முன்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்மத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் பாடசாலை முடிவடைந்து தனது விடுதிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியரை வழிமறித்து இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டது. இரும்பு கம்பிகளினால் கடுமையாக தாக்கப்பட்ட குறித்த ஆசிரியர்; வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்களை மூன்று தினங்களுக்குள் கைது செய்து […]

Continue Reading

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை அவசியம்

இலங்கையில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சுயாதீன மனித உரிமைகள் காப்பு அமைப்பு ஒன்று வலியுறுத்தியுள்ளது. இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்டம் ஒழுங்கு உரியமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென அந்த அமைப்பு கடிதமூலமாக கோரியுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.

Continue Reading

பெரியகடை ஜும்மா பள்ளிவாசல் மீது தீவைப்பு

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று இரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்குள் நடந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இப்பள்ளிவாசல் புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருவதால் அருகில் தற்காலிகமாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசல் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தீவைப்பினால் வணக்கஸ்தலத்திற்குள்ளே இருக்கின்ற தரைவிரிப்புகள் தீயினால் கருகி உள்ளதை காணக்கூடியதாக இருந்ததுடன், ஒரு மதுபான போத்தலும் […]

Continue Reading