திண்மக் கழிவு முகாமைத்துவ பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு மாநகர சபை திண்மக் கழிவுகளை முகாமைத்துவப்படுத்தும் நிலைய பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். மட்டக்களப்பு மாநகர சபையினால் மட்டக்களப்பு மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளை முகாமைத்துவப்படுத்தும் மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியில் நேற்று சனிக்கிழமை காலை முதல் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் வி.தவராஜா தெரிவித்துள்ளார். […]

Continue Reading

வாழைச்சேனையில் தேரரின் நடவடிக்கையால் அமைதியின்மை

மட்டக்களப்பு வாழைச்சேனை முறாவோடை பாடசாலை மைதானத்திலுள்ள குடிசைகளை அகற்ற மங்களராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தலைமையில் பிரதேச மக்கள் சிலர் முற்பட்டதால் அங்கு சற்று அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி ஆலயத்தில் மத நல்லிணக்கத்திற்காக விஷேட பூஜைகள் நடைபெற்றதுடன், முறாவோடை பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிசைகளுக்கு எதிராக பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த பாடசாலைக்கு சென்று அங்கு அமைக்கப்பட்ட வேலிகளை அகற்ற முற்பட்டதைத் தொடர்ந்து, கலகம் அடக்கும் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் […]

Continue Reading

கல்குடாவில் கவனயீர்ப்புப் பேரணி

மட்டக்களப்பு கல்குடா எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை நிறுத்துமாறு கோரி கல்குடா உலமா சபையினால் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு பேரணி இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் நடைபெற்றது. ஓட்டமாவடி மீராவோடை, காவத்தமுனை, செம்மன்னோடை, மாவடிச்சேனை, தியாவட்டவான் வாழைச்சேனை, பிறைந்துறைச்சேனை பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கலாசார, குடும்பச் சீரழிவுகளை உருவாக்கி சமுதாயத்தைக் கெடுக்கும் எத்தனோல் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணியை உடன் நிறுத்தக் கோருவோம், மதுவை எதிர்த்து […]

Continue Reading

கல்லடியில் ஆணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. திருச்செந்தூர் பகுதியிலுள்ள கடற்கரையிலேயே கரையொதுங்கிய நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாகத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சடலம் சுமார் 35 – 40 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையது எனவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

பட்டதாரிகளின் பிரச்சினை உருவாகாத வகையிலான செயற்திட்டங்கள் அவசியம்

எதிர்காலத்தில் பட்டதாரிகள் வீதியில் இறங்கிப் போராடாத வகையில் அவர்களுக்கான தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மாகாண சபைகள் சிறந்த திட்டங்களை தீட்டி செயற்படுத்த வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமது தொழில் உரிமையை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 74ஆவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராடிவரும் நிலையில், அவர்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அண்மையில் மட்டக்களப்பில் போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளின் போராட்ட இடத்துக்கு எதிர்க்கட்சி […]

Continue Reading

வலயக் கல்விப் பணிப்பாளரானார் தினகரன் ரவி

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசின் பேரில் தற்காலிக வலயக் கல்விப் பணிப்பாளராக வலயத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தரான பிரதி கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளருக்கான பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் இன்று (3) அவர் நியமிக்கப்பட்டு பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணராஜா ஏப்ரல் 29ஆம் திகதி ஓய்வுபெற்றுச் சென்றதையடுத்து வலயத்திற்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில் குறித்த சிபாரிசை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ளார். வலயத்தின் […]

Continue Reading

பட்டதாரிகளை நடுத்தெருவில் நிறுத்தியதா நல்லாட்சி அரசாங்கம்???

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் சத்தியாக்கிரக போராட்டம் 72ஆவது நாளாகவும் இன்று காந்தி பூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமது போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உறுதியளித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த வேண்டுமென பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இரண்டு மாதங்களை கடந்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரிடம் தமது பிரச்சினைகள் முழுமையாக கொண்டு செல்லப்படாதது கவலையளிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட […]

Continue Reading

கொக்கட்டிச்சோலையில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, விடுதிக்கல் பகுதியில் குப்பை கொட்டும் பகுதியில் ஏற்பட்ட தீயை அடுத்து அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்ற மாலை மண்முனை தென்மேற்கு பிரதேச சபையினால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும் விடுதிக்கல் பகுதியில் பாரிய தீ பரவியதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். குறித்த தீயானது இதுவரையில் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தொடர்ந்து எரிவதன் காரணமாக குறித்த பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், குப்பை கொட்டுவதற்கு வந்த […]

Continue Reading