சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றமற்றர்களானால், இழப்பீடு கிடைக்குமா?

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்காலத்தில் குற்றமற்றவர்களென நிரூபிக்கப்படும் பட்சத்தில் தமது குடும்பங்கள் இழந்த இழப்பீடுகளை வழங்க முடியுமா என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கேள்வியெழுப்பியுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்த போதே அவர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் தாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதியளித்துள்ளார்.

Continue Reading

போரினால் அழிவடைந்த பிரதேசங்களை வளம் மிக்கதாக மாற்ற வேண்டும்

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் (26) கிளிநொச்சியில் நடைபெற்றது. அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, குண்டசாலை பகுதியில் கரந்தகொல்ல என்ற இடத்தில் 2 வருடங்களுக்கு வேதனத்துடனான பயிற்சி இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். […]

Continue Reading

வடக்கின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டும்! -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டி இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை பெற்றுக் கொள்ளல், அவற்றை முறையாக செலவு செய்தல், திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல், என்பன […]

Continue Reading

தமிழ் இளைஞர், யுவதிகளை பொலிஸ் துறைக்கு அழைக்கும் முதலமைச்சர் (Video)

தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்து எமது ஆதிக்கத்தினை செலுத்தினால், பொலிஸ் அதிகாரத்தினை நாம் கையில் எடுக்க முடியும். பொலிஸ் சேவைக்காக 500 விண்ணப்பங்கள் உள்ளன. அவற்றில் இணைந்து கொள்வதற்கு எமது தமிழ் இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண முதலமைச்சருக்கும், வடமாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முதலமைச்சர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை; (14.07) சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பின் போது, அண்மையில், […]

Continue Reading

மாற்றுத் தலைமை என்ற பேச்சிற்கே இடமில்லை – விக்னேஸ்வரன் (Video & Photo)

மாற்றுத் தலைமைக்கு இடமில்லை. ஒற்றுமையே எமது பலம்  என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உறுதிபட தெரிவித்தார். கனடா நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெலி வைற்றிங் முதலமைச்சரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் நிறைவில், ஊடகங்களுக்கு முதலமைச்சர் கருத்து தெரிவித்தார். அதன்போது தமிழர்களுக்கு மாற்றுத் தலைமை வேண்டும். அந்த மாற்றுத் தலைமை சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைவது சிறந்தென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் தலைமை அவசியமென்பதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா என முதலமைச்சரிடம் கேட்டபோதே அவர் […]

Continue Reading

வடமாகாண சபை விவகாரம்; சுமூகமான முடிவை எட்டியதாக வடக்கு முதல்வர் தெரிவிப்பு (Video)

சாட்சிகள் சம்பந்தமாக தலையீடுகளில் ஈடுபடவோ, அவர்களைப் பயமுறுத்தவோ, சாட்சியங்களில் தலையீடு செய்யவோ அவர்கள் எத்தனிக்காதிருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள். இவ்வாறான உடன்படிக்ககைகளின் நிமித்தமாக விடுமுறை சார்ந்த நிபந்தனையை வலியுறுத்தாமல் விடுகின்றேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு நேற்று (19) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட சில விடயங்களுக்கு முதலில் விளக்கம் தருகின்றேன். குறிப்பிட்ட […]

Continue Reading