வாகன வரிப்பணம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

சொகுசு, அரை சொகுசு வாகனங்களுக்குச் செலுத்தப்படாத வரிப்பணத்தை அறவிடுகையில் சலுகை காலம் ஒன்றை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக, செலுத்தப்படாத வரிப்பணத்தை நாளை முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை செலுத்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, செலுத்தப்படாத வரிப்பணத்துடன் நூற்றுக்கு 5 சதவீதம் மாத்திரம் அபாரதம் விதிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Continue Reading

கேப்பாப்புலவு விவகாரம்; இராணுவத்திற்கு நிதி வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

கேப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக, அவ்விடத்திலுள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கீகாரம் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக இராணுவ கட்டுப்பாட்டின் கீழுள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், […]

Continue Reading

பஸ் கட்டணக் கொள்கையில் மாற்றம்?

பஸ் கட்டண கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவருவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிப்பதற்காக, அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருடாந்த பஸ் கட்டண திருத்தமானது, 2002ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கொள்கையின் அடிப்படையிலேயே இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், தற்காலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப, சமூக, பொருளாதார மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, குறித்த கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ள நிலையில், பஸ் சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கங்கள் என்பவற்றுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பஸ் கட்டணங்களில் திருத்தங்களை […]

Continue Reading

பொலித்தீன் பாவனைத் தடை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராய்வு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட பொலித்தீன் பைகள், உணவு பொதியிடும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டிகள் என்பவற்றுக்கு தடைவிதிக்கப்படுகின்ற போதிலும், பொலித்தீன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மாற்றுத்தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளடன், இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு […]

Continue Reading

முன்னைய அரசின் ஊழல் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடல்

முன்னைய அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் இரண்டரை வருட ஆட்சிக்காலத்தில், கடந்தகால ஊழல்கள் குறித்த விசாரணையில் போதுமான முன்னேற்றம் இல்லையென சில அமைச்சர்கள் சுட்டிக்காட்டிய நிலையில், இவ்வாறான ஊழல்கள் தொடர்பான விசாரணைக்காக விஷேட நீதிமன்றம் ஒன்றை உருவாக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அரசியல் யாப்பில் திருத்தங்களை ஏற்படுத்தினால் மாத்திரமே அவ்வாறான நீதிமன்றத்தை அமைக்க முடியுமென நீதி அமைச்சர் […]

Continue Reading

மிளகு உற்பத்தியாளர்களுக்காக அமைச்சரவை உபகுழு

மிளகு விலை குறைவினால் பாதிக்கப்படும் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வருமான வழியினை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது. சர்வதேச சந்தை மற்றும் தேசிய சந்தையில் மிளகு விலை அன்றாடம் குறைவடைவதனாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவிற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமை தாங்குவதுடன், இந்த உபகுழுவானது மிளகு விலை குறைவினால் பாதிப்படைபவர்கள் தொடர்பில் பரிசீலித்து அமைச்சரவைக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading

அமைச்சரவைக் கூட்டம் நாளை வரை பிற்போடப்பட்டது

இன்று இடம்பெறவிருந்த வாராந்த அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் வரையில் பிற்போடப்பட்டுள்ளது. வாராந்த அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்று வந்த போதிலும், கண்டி தலதா மாளிகையின் பெரஹரவில் ஜனாதிபதி பங்கேற்பதனால் அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் வரையில் பிற்போடப்பட்டது. இருந்த போதிலும், அது நாளை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுமென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Continue Reading

இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்

இவ்வாரத்தின் அமைச்சரவை கூட்டத்தை இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. வழமையாக அமைச்சரவை கூட்டம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை தினத்தில் இடம்பெற்று வருகிறது என்ற போதிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் இறுதி ரந்தொலி பெரஹராவில் கலந்து கொண்டுள்ளதால் இக்கூட்டம் இன்று மாலை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Continue Reading

மேல் நீதிமன்ற நீதிபதிகளை அதிகரிக்க அனுமதி

மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டத் திருத்தத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது. மேல் நீதிமன்றத்திற்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையை 75 இலிருந்து 85 வரை அதிகரிப்பது தொடர்பில், சட்ட வரைஞர் திணைக்களத்தின் மூலம் இந்த நீதிமன்ற அமைப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

Continue Reading

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (25.07.2017) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது […]

Continue Reading

பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி

பஸ் கட்டணங்களை 6.28 வீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதற்கமைய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 9.00 ரூபாவில் இருந்து 10.00 ரூபாவாக உயர்வடையவுள்ளதுடன், ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளார்.

Continue Reading