தென்மராட்சியில் குடும்பஸ்தர் பலி

சாவகச்சேரியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு இன்று சந்தைக்குக் கொண்டு சென்ற போது, சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு முன்னால், டிப்பருடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இந்த விபத்தில் தோப்பு ஒழுங்கை மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சிவராஜா (வயது 50) என்பவரே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் சாவகச்சேரி பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Continue Reading

சாவகச்சேரியில் விபத்து – நால்வர் படுகாயம் (Photos)

யாழ்ப்பாணம், சாகவச்சேரி, தனங்கிளப்பு பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகது. காயமடைந்தவர்கள் சாகவச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக இருவர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டையை சேர்ந்த நான்கு இளைஞர்களே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading