அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கு!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று (25.07.2017) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே குறித்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தின் மூலம் தொழிற்பேட்டை ஒன்று அமைவது மாத்திரமன்றி நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானது […]

Continue Reading

இறுகக் கரம் கோர்க்கிறதா இலங்கை – சீனா அரசாங்கங்கள்?

இலங்கையில் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்காக சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின் பிங் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பீஜிங்கில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளதுடன், இலங்கையின் சமாதானம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளுக்காக 2 பில்லியன் யுவான் நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் அபிவிருத்திக்காக […]

Continue Reading

துறைமுக அபிவிருத்திக்கு சீனா உதவும்

ஒரே கரையோரம் ஒரே பாதை என்ற தொனிப்பொருளின் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதன் முக்கியத்துவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். ஒரே கரையோரம் ஒரே பாதை அரச தலைவர்கள் மட்டத்திலான மாநாட்டிற்கு முன்னோடியாக அரச தலைவர்களுடன் இடம்பெற்ற இராப்போசன விருந்து உபசாரத்தின்போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். புராதன கடல்வழிப் பாதையுடன் தொடர்புடைய நாடுகளில் பாதுகாக்கப்பட்டுவரும் தொல்பொருட்கள் தொடர்பாக டிஜிட்டல் தகவல்களை திரட்டுவதற்கும், பௌத்த கலாசாரத் தொடர்புகளை உறுதிசெய்தல், பிரஜைகளை வலுவூட்டும்போது பெண்கள் மற்றும் […]

Continue Reading