சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் அன்பளிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்துள்ளது. சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தியடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை அனர்த்தங்களைச் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு, தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச ரீதியில் கிடைக்கும் நிதி […]

Continue Reading

நிவாரணப் பொருட்களுடன் சீன விமானம் வருகை

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருட்களுடன் கூடிய சீன விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று பிற்பகல் குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் இலங்கைக்காக சீனத் தூதுவர் ஆகியோரால் விமானம் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இருப்பதாகவும், இதில் 6000 கூடாரங்களுக்கான துணி, […]

Continue Reading

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாடு

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒரே கரையோரம், ஓரே பாதை என்ற மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. 65 நாடுகள் பங்குபற்றும் இந்த மாநாடு இருநாட்கள் இடம்பெறவுள்ளது. இதில், சுமார் 20 அரச தலைவர்கள் கலந்துகொள்வதுடன், இந்தியா இதன்பொருட்டு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதேவேளை, இலங்கை சார்பில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவொன்று பீஜிங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சீனாவின் மிகப்பெரிய போர்க்கப்பல்

சீனாவிலேயே உருவாக்கப்பட்ட மிகப்பெரிய போர்க் கப்பல் நேற்று கடலில் இறக்கப்பட்டது. 50 தொன் எடை கொண்ட இக்கப்பலைத் தயாரிக்கும் பணியில் சீனா கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 04 ஆண்டுகள் முற்றிலும் முடிந்த நிலையில் கப்பலை கடலில் இறக்கி தனது வலிமையை உலக நாடுகளுக்கு சீனா பறைசாற்றியுள்ளது. இந்த போர்க்கப்பல் 2020ஆம் ஆண்டு சீன இராணுவத்தில் இணைக்கப்படவுள்ள நிலையில், கப்பலை பரிசோதிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பும் சீனாவின் நடவடிக்கைகளில் இதுவும் […]

Continue Reading

இலக்கை விஞ்சி சாதனை படைத்தது சீனா!

முதல் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி வீதத்தில் நிர்ணயித்த இலக்கையும் விஞ்சி சீனா சாதனை படைத்துள்ளது. சீனாவின் உட்கட்டமைப்புத் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்து, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்துள்ளதால், நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதலாவது காலாண்டில் சீனப் பொருளாதாரம் 6.9 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டியுள்ளது. அதன்படி, முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.63 இலட்சம் கோடி டொலரை எட்டியுள்ளது. இந்த பொருளாதார வளர்ச்சி என்பது, முழு ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவான […]

Continue Reading