ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் அனுமதி!

அனைத்துப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளை வான், கொழும்பு குற்றப் பிரிவினுடையது (சி.சி.டி) என்று, நீதிமன்றத்தின் கவனத்துக்கு, நேற்று (24) கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, ரயன் ஜயலத்தைக் கைதுசெய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (24) அனுமதித்தார். சுகாதார அமைச்சுக்குள்அத்துமீறி நுழைந்து 870, 227 ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பான சந்தேகத்தின் பேரில் அவரைக் கைதுசெய்யவதற்காக, கொழும்பு குற்றப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமையவே […]

Continue Reading

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. பௌத்த பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசினார் எனும் குற்றச்சாட்டின் பேரிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக கொழும்பிற்கு வருமாறும் தெரிவித்துள்ளனர். இந்த விசாரணைக்காக கொழும்புக்கு வருவதற்குத் தாம் தயாராக இல்லை என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினார்கள் அவர்களுக்கு […]

Continue Reading

முறையற்ற வகையில் கழிவுகளைக் கொட்டினால் கடும் சட்ட நடவடிக்கை

கொழும்பில் முறையற்ற வகையில் கழிவுகளை கொட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்படுவோரை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து முன்னெடுத்துவரும் நிலையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் அடிப்படையில் தற்போது 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் கொழும்பின் பல பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், தங்களின் வீடுகளில் சேர்க்கப்படும் கழிவுகளை வகை பிரித்து கழிவகற்றும் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு மாநகர […]

Continue Reading

ஆர்ப்பாட்டத்திற்குத் தடை

கொழும்பில் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தரப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், கொழும்பு முதன்மை நீதிமன்ற நீதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்வி சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக தீர்வை காணுதல் மற்றும் சயிட்டம் நிறுவனத்தை இரத்து செய்தல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் மருத்துவபீட மாணவர் செயற்குழு என்பன குறித்த போராட்டத்தை மேற்கொள்ளவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

கொழும்பில் ஹோட்டல் நிர்மாணப் பணியின் போது எலும்புக்கூடுகள் மீட்பு

கொழும்பு, கோட்டைப் பகுதியில் சங்கிரி லா ஐந்து நட்சத்திர ஹொட்டல் நிர்மாணத் தளத்திலிருந்து மனித எலும்புகள் சில மீட்கப்பட்டுள்ளதாக, கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். பாரிய இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை அகழும் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதே இந்த மனித எலும்புகள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இந்தத் தளம் இராணுவத்திற்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறிருக்க, பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடத்தில், மயானம் இருந்ததாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.

Continue Reading

விஷேட போக்குவரத்து முறை விரைவில்

கொழும்பு நகரப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட போக்குவரத்து முறையை எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. வீதி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யும் விஷேட போக்குவரத்து முறையொன்று நேற்று முழுவதும் கொழும்பு நகரில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக, நேற்றைய தினம் முழுவது 79 வழக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும், இடது […]

Continue Reading

உலக இஸ்லாமிய தலைவர்கள் அரசிற்குப் பாராட்டு

மத ஒற்றுமை மற்றும் சமாதானம் குறித்து தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள தூரநோக்கிற்கு உலக இஸ்லாமிய தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய யதார்த்தம் மற்றும் சமகால சவால் என்ற தொனிப்பொருளில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டிற்காக வந்திருந்த சிரேஷ்ட இஸ்லாமிய பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து அவரை சந்தித்து கலந்துரையாடிய போது தொனிப்பொருள் மற்றும் மாநாடு தொடர்பாக பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சமகாலத்தில் அரசியல்வாதிகள் தொடர்பாக பொதுமக்களின் நம்பிக்கை வீண்போயுள்ள நிலையில், மதத் […]

Continue Reading

பாகிஸ்தான் பிரஜை கைது

70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பொலிஸ் போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading