மயான விவகாரம்; கைதானவர்களுக்கு பிணை

யாழ். புத்தூர் கலைமதி பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் 24 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஜூட்சன், நேற்று (30) அனுமதியளித்தார். புத்தூர் பகுதியிலுள்ள கிந்துசிட்டி மயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கமைய இடம்பெற்றுவரும் கட்டிட வேலைக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் அரச சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்யச் சென்ற அச்சுவேலி பொலிஸாருடைய ஜீப் […]

Continue Reading

அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைக்கு அனுமதியில்லை

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. பத்பேரியே விமலஞான தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அபயராம விகாரையை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதன் ஊடாக பக்தர்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதனால் அதற்கு தடை விதிக்குமாறு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அமைவாக, விடயங்களை ஆராய்ந்த நீதிபதி அபயராம […]

Continue Reading

பட்டதாரிகள் பிணையில் விடுக்கப்பட்டனர்

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளின் முற்றுகைப் போராட்டத்தின் போது, நீதிமன்றக் கட்டளை கிழித்தெறியப்பட்டமை தொடர்பில் கடந்த 23ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றம் மூலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னாந்த ஞானரத்ன தேரர் மற்றும் மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிசாந்தன் உட்பட நால்வரின் வழக்கு […]

Continue Reading

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

மேல் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளின் எண்ணிக்கையை 85 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைவாக, நீதிமன்ற ஒழுங்கமைப்பு சட்டமூலத்தை திருத்துவதற்கு சட்டவரைவு தொகுப்பாளருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் 75 பேர் தற்போது நீதிமன்ற கட்டமைப்பில் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் தீர்வு காணப்படாத வழக்குகள் பெருமளவிலுள்ள நிலையில் அவற்றுக்கு உடனடி தீர்வுகளை வழங்கும் பொருட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் […]

Continue Reading

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்திற்கு இடைக்கால தடையுத்தவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய உள்ளிட்ட ஒன்பது பேருக்கு நீதிமன்றத்தில் மே மாதம் 4ஆம் திகதி தகவலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading