5ஆவது போட்டியிலும் இலங்கைக்குத் தோல்வி

இந்திய – இலங்கை அணிகளுக்கு இடையிலான 5ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களை பெற்ற நிலையில், பதிலளித்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. விராட் கோலி 110 ஓட்டங்களையும், ஜாதவ் 63 ஓட்டங்களையும் பெற்றனர். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி […]

Continue Reading

4ஆவது போட்டியையும் தன்வசப்படுத்தியது இந்தியா

இலங்கை அணிக்கு எதிரான 4ஆவது சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதல் விக்கெட் 06 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட போதிலும், இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஜோடி 219 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சவாலான நிலைக்கு உயர்த்தியது. அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோஹ்லி, சர்வதேச ஒருநாள் அரங்கில் […]

Continue Reading

இந்திய அணிக்கு வெற்றி

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான 3ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 09 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 45.1 ஓவர் நிறைவில் 04 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஷர்மா 122 ஓட்டங்களையும், தோனி 67 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை, தனஞ்செய 38 ஓட்டங்களை […]

Continue Reading

இலங்கை – இந்திய அணிகளின் 2ஆவது ஒருநாள் போட்டி

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. நாளைய போட்டியில் 03 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க இலங்கை அணி தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 02 வேகப்பந்து வீச்சாளர்கள், 02 சுழற்பந்து வீச்சாளர் மற்றும் இரண்டு சகல துறை வீரர்களுடன் களமிறங்கிய போதிலும், சிக்கார்தவான் மற்றும் விராட் கோலி ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தை, பந்துவீச்சுக் […]

Continue Reading

இந்திய அணிக்கு 217 ஓட்டங்கள் இலக்கு

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 216 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தமைக்கு இணங்க, 43.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 216 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றுள்ளது. இலங்கை சார்பாக திக்வெல்ல 64 ஓட்டங்களையும், மெண்டிஸ் 36 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 36 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

Continue Reading

487 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் பல்லேகலையில் நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுள்ளது. இந்திய வீரர் ஹர்த்திக் பாண்டியா, 07 சிக்சர்களுடன் 108 ஓட்டங்களை பெற்றதுடன், ஷிக்கர் தவான் 119 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

Continue Reading

தொடரை வெற்றிகொண்டது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரர்களான தவான் 35 ஓட்டங்களையும் லோகேஸ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் வெளியேறிய போதிலும், அடுத்ததாக வந்த புஜாரா அதிரடியாக ஆடி 133 ஓட்டங்களை குவித்தார். மறுபுறம் விராட் […]

Continue Reading

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை – இந்திய அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரில், காலி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

Continue Reading

இலங்கையை வென்றது இந்தியா

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. காலி மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அதிகபட்சமாக 06 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 03 விக்கட்டுகளையும் வீழ்த்தினார்கள். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 291 […]

Continue Reading

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்றுவரும் நிலையில், நாணய சுழற்சி வென்று முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் அதிகபட்சமாக 06 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 03 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், 309 […]

Continue Reading

இலங்கைக்கு வெற்றி

சம்பியன் ட்ராபி தொடரின் இன்றைய போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 07 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, இந்திய அணி சார்பில் ஆரம்ப வீரர்களான ஷிகீர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் துடுப்புடன் களமிறங்கினர். அசத்தலாக ஆடிய தவான் 125 ஓட்டங்களைக் குவிக்க, சர்மா 78 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் தோனி சிறப்பாக ஆடி 63 ஓட்டங்களையும் பெற்றுக் […]

Continue Reading