பந்து தலையில் தாக்கி பாக். வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் முதல்தர போட்டிகளில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். பாகிஸ்தானின் கிளப் அணியில் விளையாடி வந்த இளம் வீரர் ஜுபைர் அகமது, மர்தானில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் விளையாடிய போது பவுன்சர் பந்து அவரது தலையில் தாக்கியது. பேட்டிங் செய்தபோது அவர் ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். ஜுபைர் அகமது குவெட்டா பியர்ஸ் அணிக்காக […]

Continue Reading

கிரிக்கெட் சபைத் தலைவர் பதவி விலகுவது அவசியம்

இலங்கையணி தொடர்ச்சியாக பல தோல்விகளை சந்தித்து வருவதனால், கிரிக்கெட் சபையின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எமது அணி வெல்லவேண்டுமானால் கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ளவர்களை மாற்றவேண்டிய தேவையுள்ளதாக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின் ஊடகவியளார்கள் மத்தியில் தெரிவித்துள்ளதுடன், கிரிக்கெட்டுக்கு கெட்ட காலமாக உள்ளதாகவும், இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்நிலையேற்படுமெனத் தான் கூறியதாகவும், காரணம் தவறானவர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தை கையிலெடுத்துள்ளமை எனவும் தெரிவித்துள்ளார். இந்திய […]

Continue Reading

இலங்கை, ஆஸி., நியூஸிலாந்து முக்கோணக் கிரிக்கெட் சுற்று

இலங்கை, அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் இந்தியாவில் பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நேற்று கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 23 சர்வதேச போட்டிகள் இதன்போது இடம்பெறவுள்ள நிலையில், இதில் மூன்று டெஸ்ட் போட்டிகள், 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 ரி-ருவன்ரி போட்டிகள் அடங்குகின்றன. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின்..!

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விருப்பத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் சபை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்வதால் ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவரது கவனம் தடைபடக் கூடாது. துடுப்பாட்ட ஆலோசகர் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 நாட்களாவது அணியுடன் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுக்கவில்லை என்றால் அணியின் ஏனைய […]

Continue Reading

சிம்பாப்வேயை வீழ்த்தியது இலங்கை

இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 04 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில், 388 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைத் தொட்டது. இலங்கை அணி சார்பாக நிரோஷன் டிக்வெல்ல 81, அசேல குணரட்ன ஆட்டமிழக்காமல் 80, குசல் மென்டிஸ் 66, திமுத் கருணாரத்ன 49 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பந்துவீச்சில் கிறேம் கிறீமர் 04 விக்கெட்டுகளையும் ஷோன் […]

Continue Reading

அணித் தலைவர்களாக தினேஸ் சந்திமால், உபுல் தரங்க நியமனம்

ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இலங்கை டெஸ்ட் அணித் தலைவராக தினேஸ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற சிம்பாபே அணியுடனான ஒருநாள் தொடரை 2-3 என இலங்கை அணி இழந்திருந்ததைத் தொடர்ந்து, முன்வைக்கப்பட்ட விமர்சனங்களைத் தொடர்ந்து இலங்கை அணித் தலைவராக இருந்த அஞ்சலோ மெத்தியூஸ், தலைமைப் பொறுப்பில் இருந்து […]

Continue Reading

உறுப்பினர் அந்தஸ்தைப் பெற்றன அயர்லாந்து, ஆப்கானிஸ்தான்

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிரந்தர உறுப்பினர்களாக அங்கத்துவம் பெற்றுள்ளன. இதற்கு அமைவாக, இவ்விரு அணிகளும் எதிர்காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 09 விக்கட்டுகளால் வெற்றி கொண்டது. பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 264 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுகளை இழந்த நிலையில், பதிலளித்தாடிய இந்திய அணி ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது. இதற்கமைவாக, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் மோதவுள்ளன.

Continue Reading

இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் களத்தடுப்பில் முதலில் ஈடுபட்டமைக்கு இணங்க, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவரில் 211 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி இடையில் தடுமாற, அணி சார்பாக அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோவ் 43 ஓட்டங்களையும், ஜோ […]

Continue Reading

அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான்

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சோபியா கார்டின்ஸ் மைதானத்தில் நேற்று (12) நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தமைக்கு அமைவாக, இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக மற்றும் […]

Continue Reading

அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பங்களாதேஷ்

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறியது. சோபியா கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து சார்பில் ரொஸ் டெய்லர் 63 ஓட்டங்களையும், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் 57 ஓட்டங்களையும் பெற்ற நிலையில், நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 08 விக்கெட் இழப்பிற்கு […]

Continue Reading

தலைவராகத் தெரிவானார் அஞ்சலோ

ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூசும் உப தலைவராக உப்புல் தரங்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

Continue Reading