யாழில் தொடரும் வாள்வெட்டுக் கலாசாரம்

சாவகச்சேரி, அல்லாரைப் பகுதியில், வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் இளைஞர் ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞர் ஒருவருக்கே காலில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென காயமடைந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading

தென்மராட்சியில் வாள்வெட்டு – பீதியில் மக்கள்

யாழ். தென்மராட்சிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவமொன்றில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சேரி, மட்டுவில் வடக்கு முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு வீதியோரத்தில் பேசிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவத்தில் மட்டுவில் முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த பெரியநாயகம் பாலகுமார் […]

Continue Reading