கிளிநொச்சியில் அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதல்!

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கிளிநொச்சியில் கல்வீச்சு மேற்கொள்ளப்படடுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் குறித்த கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இத் தாக்குதல் சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதும் பயணகளிற்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இ.போ.ச பஸ் மீது தாக்குதல்

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னார் இ.போ.ச. டிப்போ பஸ் மீது புத்தளம் – சிலாபம் வீதியில் உள்ள பங்கதெனிய என்ற இடத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், பஸ்ஸின் முன் கண்ணாடிகள், பக்கவாட்டுக் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், சாரதி காயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பஸ் சாரதி, சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Continue Reading