நல்லூர் தாக்குதலுக்கு வவுனியா மன்னாரில் கண்டணம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சிக்கு வவுனியா மன்றும் மன்னாரில் கண்டன பேரணி இடம்பெற்றள்ளது. பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று (25.07.2017) வவுனியாவில் அமைதிப் பேரணி ஒன்று நடைபெற்றது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. வவுனியா உள்ளூர் விளைபொருள் விற்பனை சந்தையின் முன்பாக ஆரம்பமான கண்டனப் பேரணி பஸார் வீதி வழியாக வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியை வந்தடைந்துஇ பின்பு அங்கிருந்து […]

Continue Reading

ஹேமச்சந்திர மரணம்: பிரதம மந்திரி இரங்கல் தெரிவித்துள்ளார்!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவின் குடும்பத்துக்கு  தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ கீச்சகப் பக்கத்தில் இதனைப் பதிவேற்றியுள்ளார். “பணியிலிருக்கும் போது உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமே. இந்த நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Continue Reading

அச்சுவேலியில் முதியவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணத்தில் காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவந்த முதியவர் ஒருவர் கைவிடப்பட்ட காணியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி தெற்கு காளி கோயிலடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சண்முகம் சிவகுருநாதன் என்பவரே நேற்றைய தினம் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த வியாழக்கிழமை வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு திரும்பாத நிலையில் அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் அச்சுவேலி – தொண்டமானாறு […]

Continue Reading