இடிதாக்கி மீனவர் பலி – யாழில் சம்பவம்

யாழில் இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த பற்றிக் நிரஞ்சன் (வயது 28) என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்த வேளையி;ல் நேற்று இரவு குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்க நண்பர்களுடன் சென்ற நிலையில் இன்று அதிகாலையே இந்த உயிரிழப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவருடன் கூடச் சென்றவர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Continue Reading

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (221.07.2017) மாலை சுமார் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர். இதில் நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த றெக்ஸ் கமில்டன் எனும் 27 வயதான பல்கலைக்கழக மாணவரே உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட […]

Continue Reading

மகாவலி கங்கையில் மூழ்கியவரைக் காணவில்லை

மகாவலி கங்கையின் கட்டுகஸ்தொட்ட, கல்ஒலுவ பிரதேசத்தில் ஆணொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மகாவலி கங்கையில் நீராடச் சென்ற 05 பேரில் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், குறித்த நபர் பதுளையைச் சேர்ந்த 38 வயதான இளைஞரெனத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading

யானை தாக்கியதில் முதியவர் பலி

காட்டு யானை தாக்கியதால் வயோதிபர் ஒருவர் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உயிரிழந்துள்ளார். முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் பிரதேசத்தை அண்மித்துள்ள மளங்காடு கிராமத்திலேயே இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. அரிசி ஆலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் 64 வயதான ஒருவரையே யானை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

இந்தோனேஷியா செல்ல வந்த வெளிநாட்டுப் பெண் மரணம்

சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று மாலை விமானத்தில் மாரடைப்பு காரணமாக இவர் பலியாகியுள்ளதாகவும், இவர் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 61 வயதான பெண் எனவும், தனது கணவருடன் பயணித்துக் கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளதாகவும் விமான நிலையச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவரது சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், சடலம் தொடர்பான அனைத்து […]

Continue Reading

மேதின பேரணிக்குச் சென்றவர் தவறிவீழ்ந்து உயிரிழப்பு

மேதின பேரணிக்காக மக்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸிலிருந்து ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். கொழும்பு, ஹெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மேதினப் பேரணிக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று இன்று அதிகாலை 2.00 மணியளவில் சிகிரியா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், பஸ்ஸின் மிதிபலகையில் இருந்து விழுந்து பின் சக்கரத்தில் சிக்குண்டு ஒருவர் படுகாயடைந்துள்ளார். சிகிரியா பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

Continue Reading

மதில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

மட்டக்களப்பு, ஏறாவூர் 4ஆம் குறிச்சியிலுள்ள வீட்டு மதில் சரிந்து விழுந்ததில் அச்சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் படமாளிகை வீதியைச் சேர்ந்த 07 வயதுடைய சண்முகராசா ஷாறுக்கா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கடந்த 04 நாட்களுக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்ட மதில் பகுதிக்கு அருகில் நேற்று குறித்த சிறுமியும் அவரது சகோதரனும் விளையாடிக் கொண்டிருந்த போது மதில் சரிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து படுகாயமடைந்த சிறுமியை, ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற […]

Continue Reading

சம்மாந்துறையில் குழந்தை பலி

சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியில் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் நடமாடும் லொறியொன்றல் மோதுண்டு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. தனது தாயுடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், இந்த விபத்தில் காயமடைந்து ஒன்றரை வயது குழந்தை நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading

மீதொட்டமுல்லையில் உயிரிழப்பு அதிகரிப்பு!

மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Continue Reading

நீரில் மூழ்கி மாணவன் பலி

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவன் ஒருவரே மாஓயாவில் குளிப்பதற்காக சென்றிருந்த போது மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Continue Reading