வடக்குக் கிழக்கில் டெங்கு அபாயம்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மழையுடனான வானிலை நீடிப்பதால் டெங்கு நுளம்புகள் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாகவும், இதனால் தமது சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் எனவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். இதுவரையான காலப்பகுதியில் 132,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் சுமார் 350 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டெங்கு நோயாளர்களின் பதிவில் வீழ்ச்சி

மருத்துவமனைகளில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சிறப்பு மருத்துவர் ப்ரசிலா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடும்போது தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தால் குறைவடைந்துள்ளதாகவும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு நோய் தொற்று காரணமாக ஒரு லட்சத்து 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டெங்கைக் கட்டுப்படுத்த புதிய திட்டம்

டெங்கு நோய் அதிகளவில் பரவி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான மற்றுமொரு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, 15 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டுச் சூழல்கள் சோதனையிடப்பட்டு, பல வீடுகளில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் நாளைய தினம் முதல் மீண்டும் இவ்வாறான டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

கிழக்கு மாகாணத்தில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளில் ஒரே தினத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிரமதானத்தில் 1856 பாலர் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 4062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், பொலிஸார், முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். […]

Continue Reading

டெங்கு மரணங்கள் அதிகரிப்பு

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 15 ஆயிரத்தை கடந்துள்ளதுடன், அதனால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 310 ஆக உயர்ந்துள்ளதாக அரசு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார துறையினரால் பாரிய அச்சுறுத்தல் என கருதப்படும் டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளுக்கு எதிரான போராட்டம் பல்வேறு வகையில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் மே மாதம் தொடக்கம் நோயாளர்களின் எண்ணிக்கையிலும் மரணங்களிலும் அதிகரிப்பை காண முடிவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஏப்ரல் […]

Continue Reading

டெங்குக் குடம்பிகளின் கணத்தன்மை குறைவடைவு

டெங்கு தொற்று அதிகளவில் பீடிக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் டெங்கு தொற்றுக்கான குடம்பிகளின் கணத்தன்மை பிரிட்டோ அலகின்படி 10 ஆக குறைந்துள்ளதாக டெங்கு குடம்பி தொடர்பான ஆய்வகத்தின் அதிகாரிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. அதன் தலைவர் நஜித் சுமனசேன இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் காரணமாக இந்த பிரதிபலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன், இந்த வருடத்தின் இறுதி பகுதியில் மீண்டும் டெங்கு தொற்று பரவக்கூடிய அபாயம் நிலவுவதாகவும், அதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை நாளை முதல் இரு நாட்களுக்கு முன்னெடுக்க, சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்போது வீடுகள் மற்றும் சூழலை பரிசோதனை செய்ய எதிர்பார்த்துள்ளதுடன், எதிர்வரும் 28ஆம் திகதி பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கை விஷேடமாக இடம்பெறவுள்ளது. அத்துடன், ஆகஸ்ட் விடுமுறை காலப் பகுதியில் வாரத்திற்கு ஒருமுறை பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 301 பேர் டெங்கு […]

Continue Reading

டெங்கு ஒழிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு செயலணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் விஷேட டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

Continue Reading

டெங்கினால் 269 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் கடந்த காலங்களுக்குள் 269 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதுடன், 89,885 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்பு திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நிலவிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் நிலை அதிகரித்திருப்பதாகவும், டெங்கு நோய் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில், பல்வேறு தரப்பினர் வெவ்வேறான தகவல்களை பரப்புவதாகவும், அரசியல்வாதிகள் கூறுகின்ற எண்ணிக்கை, தரவுகள் பிழையானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன் டெங்கு ஒழிப்பிற்கு முடியுமான […]

Continue Reading

டெங்கு நுளம்பு 6 சதவீதத்தால் அதிகரிப்பு

டெங்கு நுளம்பின் அடர்த்தி, கடந்த வருடங்களுடன் ஒப்பிடப்படுமிடத்து, ஆறு சதவீதத்தால் அதிகரித்துள்ளதென, பூச்சியியல் பற்றிய ஆய்வுகளை நடத்திவரும் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. டெங்கு நோய்த்தொற்று அதிகரித்துவரும் மாவட்டங்களில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போதே, இவ்விடயம் தொடர்பில் கண்டறியப்பட்டதாக மேற்படி சங்கத்தின் தலைவர் நஜின் சுமனசேன தெரிவித்துள்ளார். இதேவேளை, டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் உடனடியாக நிர்வகிக்கப்படாமையால், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் சிக்கல் நிலை எழுந்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், தற்போது நாட்டில் நிலவும் மழையுடன் […]

Continue Reading

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு பெருகுவதை கட்டுப்படுத்த சுகாதார துறையினரால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இதுவரை டெங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 64 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களற்ற நாடென உலக சுகாதார அமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றுள்ள இலங்கை கொசுக்களால் பரவும் மற்றுமோர் நோயான டெங்கு […]

Continue Reading

டெங்கு மருந்து இறக்குமதி

டெங்கு நோயாளர்களுக்காக பயன்படுத்தும் டெக்ஸ்ட்ராக் எனப்படும் மருந்துகள் ஒருதொகை இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக மருத்துவ வழங்கல் பிரிவு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தற்போது டெங்கு நோயாளர்களின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் தற்போது அரசாங்கத்தின் வசம் இருப்பதாக, அப்பிரிவின் பணிப்பாளர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். டெங்கு நோயாளர்களுக்கு வழங்கும் டெக்ஸ்ட்ராக் எனப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, அண்மையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டிய போதிலும், அவ்வாறு எந்தவித பற்றாக்குறையும் இல்லையென லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். எது […]

Continue Reading