வடக்கு முதலமைச்சருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மனுத்தாக்கல்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமையை எதிர்த்து வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்குமாறும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடைவிதிக்குமாறும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனுவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், ஜி.குணசீலன், கே.சிவநேசன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, […]

Continue Reading

பதவி நீக்கப்பட்டார் டெனீஸ்வரன்?

கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக வடக்கு மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோ கட்சியில் இருந்து 06 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார். கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு 10.30 மணியளவில் வவுனியாவில் நடாத்திய கூட்டத்தின் இறுதியில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கருத்தை அறியாமல் வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை குறித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

டெனீஸ்வரனின் அவசரக் கடிதம்

வடக்கு மாகாண போக்குவரத்துத்துறை, மீன்பிடி அமைச்சராகத் தானே தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிற்கு வடமாகாண போக்குவரத்து மீன்பிடி கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வடமாகாண ஆளுநருக்கு ஆங்கிலத்தில் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலிருந்து போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராகச் செயற்படுவதாகவும், தற்போதும் அந்த அமைச்சுப் பதவியில் தொடர்ந்து […]

Continue Reading

டெனீஸ்வரனுக்கு ஆதரவாக ஜனநாயக போராளிகள் கட்சி

வடமாகானசபை அமைச்சுக்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் பதவி விலகக்கோருவது ஜனநாயக பண்பியல்புகளை மீறுகின்ற செயற்பாடுகளாகவே தாம் கருதுவதாக ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தாயகத்தின் வடக்கில் இடம்பெறும் பதவிசார் அரசியற் பூசல்கள் தாயகத்தில் இதுவரை செய்யப்பட்ட எண்ணிலடங்கா தியாகத்தின் மீது சேற்றை வீசுவதற்கு சமனானது. மக்கள் பொருண்மியம், தாயகநலன் பற்றிய பொறுப்புணர்வு இல்லாமல் முதலமைச்சர் தன்னிச்சையாக நடந்து கொள்வதாகவே நாம் நம்புகின்கின்றோம். மக்களின் வாழ்வியல், பண்பாட்டியல் […]

Continue Reading

சுய விருப்பில் விலகமாட்டேன் – டெனீஸ்வரன்

சுய விருப்பத்துடன் ஒருபோதும் பதவி விலகப் போவதில்லையென வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி குறித்த நிலைப்பாட்டை விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, மன்னாரில் அமைந்துள்ள அமைச்சின் உப அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உயர்மட்டக் கூட்டம் கடந்த 12ஆம் திகதி வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்று […]

Continue Reading

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனின் சவால்

முடிந்தால் தம்மை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு வடமாகாண போக்குவரத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளார். மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இந்தச் சவாலை விடுத்துள்ளதுடன், ஏனைய அமைச்சர்கள் விலகியதைப்போன்று தம்மால், பதவி விலக முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், ஜனநாயக வழியில் செயற்பட வேண்டிய பொறுப்பு முதலமைச்சருக்கு இருப்பதாகவும் டெனீஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading