வடக்கின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டும்! -முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்-

போருக்குப் பின்னர் மீண்டெழுந்து வருகின்ற வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை வேகமாக முன்னெடுக்க வேண்டி இருப்பதாக முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எல்லாவற்றிலும் குறை கூறுவதில் நாம் வல்லவர்கள் என்பதனாலேயே பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்த முகாமைத்துவம் மற்றும் முரண்பாடுகளை தீர்வு செய்தல் தொடர்பான கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அபிவிருத்திக்கு வேண்டிய நிதி மூலங்களை பெற்றுக் கொள்ளல், அவற்றை முறையாக செலவு செய்தல், திட்ட முன்மொழிவுகளை தயாரித்தல், என்பன […]

Continue Reading

பருத்தித்துறை துறைமுகம் அமைப்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் – டக்ளஸ் எம்.பி (Video & Photos)

7 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியில் பருத்தித்துறையில் புதிய துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பருத்தித்துறையில் மற்றொரு துறைமுகத்தினை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கொட்டடி பகுதியில் கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடற்றொழில் துறைமுகமாக பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இரண்டு […]

Continue Reading

வடக்குக் கிழக்கில் விஷேட அபிவிருத்தித் திட்டங்கள்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் வீதி அபிவிருத்தியின் பொருட்டு விஷேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளதுடன், இதன்பொருட்டு 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி

ஜப்பான், இலங்கைக்கு 42 பில்லியன் ரூபாய்களை கடனாக வழங்கவுள்ளது. களுகங்கை செயற்திட்டத்திற்காக வழங்கப்படவுள்ள இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கை இலங்கை அரசாங்க தரப்பினருக்கும் ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கான களுகங்கை திட்டத்திலான நீர்வடிகாலமைப்பு கட்டமைப்பை மேம்படுத்தி, மேலும் விரிவுபடுத்தும் திட்டத்திற்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

குளங்களின் புனரமைப்பு அவசியம்

வெள்ள அனர்த்தம் மீண்டும் ஏற்படாதிருக்க நாட்டிற்குள் குளங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். விஷேட நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், இந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதன் ஊடாக 2020ஆம் ஆண்டாகும் போது வெள்ளநிலை ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Continue Reading