அடுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ?

2020இல் மஹிந்தவைப் பிரதமராக்கும் நோக்கோடுதான் மைத்திரிபால அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அரசிலுள்ள சிலர் புரியும் ஊழலால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேசிய அரசில் சுதந்திரக் கட்சி இணைந்துள்ள போதிலும், எமது கட்சி எந்தவோர் ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும், இவ்வாறான செயற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சியே ஈடுபடுவதாகவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ஊழல் எமது தேசிய அரசுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளதாகவும், […]

Continue Reading

பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் – இராஜாங்க அமைச்சர் டிலான்

மத்திய வங்கியின் முறி மோசடி தொடர்பிலான சர்ச்சையுடன் தொடர்புடைய பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அனைவரும் சிறையடைக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்ததுடன், பெர்பெச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்துக்கு எதிராக ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குகின்றவர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading