இன விகிதாசாரத்தை பேணுமாறு டக்ளஸ் எம்.பி வலியுறுத்தல்

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையும், இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் அவர்களது தகைமை, திறமை, தகுதிகளை அவதானத்தில் கொண்டு உயர் பதவிகளில் அமர்த்தி வருவது பாராட்டத்தக்கது. அந்த வகையில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, அரச தொழில்வாய்ப்புகளின் போது இனவிகிதாசாரத்தைப் பேணும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது அவசியமென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 21ஆவது கடற்படைத் […]

Continue Reading

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைக் குறைக்கும் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் – டக்ளஸ் எம்.பி

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமேயன்றி, குறைக்கப்படக் கூடாதென ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் எமக்குக் கிடைத்துள்ள மாகாண சபை முறைமையானது, வடக்கைப் பொறுத்தவரையில் முயலாமை, இயலாமை போன்ற காரணங்களாலும், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல், மோசடிகள் காரணமாகவும் மக்கள் பணிக்குரிய செயற்றிறன் இன்மையாக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கின்ற பலருக்கு மாகாண சபை […]

Continue Reading

தமிழ் மக்களின் பிரச்சினைத் தீர்க்க அரசு முன்வர வேண்டும் – டக்ளஸ்

அரசாங்க தரப்பும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் நாடகங்களை அரங்கேற்றாமல் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வலிகாமம் வடக்கு, கேப்பாப்புலவு, இரணை தீவு உட்பட எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்கள் இன்னும் வழங்கப்படாத நிலையில், எமது மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இத்தகைய […]

Continue Reading

தமிழ் இரசிகர்களுக்கான பகிரங்க மடலில் மனம் வருந்தினார் பாடகர் உன்னிக்கிருஸ்ணன்

2012ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் உன்னிக்கிருஸ்ணன் மீண்டும் தமிழகம் திரும்பிய பின்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை அவதூறாகப் பேசியதால், இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த இசை நிகழ்வைப் புறக்கணிக்குமாறு தெரிவிக்கப்பட்டு குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனிடையே, சமூக வலைத்தளங்களிலும் குறித்த இசை நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு வந்த நிலையில், நிகழ்வும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் […]

Continue Reading

வடக்கில் வரட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

வரட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உடனடி நிவாரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னவென அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவிடம் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (25) நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அமைச்சின் விவாதத்தின்போது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே குறித்த விடயம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியிருந்தார் இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக் காலமாக நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக வடக்கு, கிழக்கு, வடமேல் […]

Continue Reading

ஈ.பி.டி.பியின் கொள்கையை ஏற்றுக் கொண்டன தமிழரசு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமானதும், நிரந்தரமானதுமான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆரம்பகாலம் தொட்டு வலியுறுத்தி வரும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கை வழிமுறையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியொன்றில் இடம்பெற்ற நேர்காணலில் பங்கேற்றிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவிக்கும் போது, மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையே தமிழ் மக்களுக்கு […]

Continue Reading

திருமலை மீள்குடியேற்ற மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

திருகோணமலை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணி உரிமங்கள் குறித்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) நாடாளுமன்றத்தில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாரத்னவிடம் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, திருகோணமலை, பட்டினமும், சூழலும் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் புளியங்குளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்டதாக செல்வநாயகபுரம், தேவாநகர், ஆனந்தபுரி, நித்தியபுரி ஆகிய நான்கு கிராமங்கள் அமைந்துள்ளன. மேற்படி கிராமங்களில் சுமார் 2,200 குடும்பங்கள் […]

Continue Reading