இரட்டைப் பிரஜாவுரிமையுடைய இராஜதந்திரிகள் தொடர்பிலும் ஆய்வு

இராஜதந்திரிகள் மத்தியில், இரட்டை பிரஜாவுரிமையை கொண்டிருப்பவர்கள் தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை பிரச்சினை எழுந்துள்ள நிலையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களில் பணியாற்றுபவர்களில் இரட்டை பிரஜாவுரிமைகளை கொண்டிருப்பவர்கள் உள்ளனரா என்பதை கண்டறியும் முகமாகவே இந்த ஆய்வு இடம்பெறுவதாகவும், வியன்னா உடன்படிக்கையின் அடிப்படையிலேயே இந்த ஆராய்வு இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகளையும் ஆபத்து நெருங்குகிறதா?

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி, அரச அதிகாரிகள் குறித்தும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டுமென பெவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, இரட்டைக் குடியுரிமை கொண்ட அரச அதிகாரிகள் தொடர்பில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Continue Reading