தேர்தலுக்காகவே வாகன விலை குறைப்பு

தேர்தலை இலக்கு வைத்து வாகன விலைகள் குறைக்கப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வாகனங்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பானது தேர்தலுக்கான அறிகுறியாகவே கருதப்பட வேண்டுமென கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வாகனங்களின் வரியைக் குறைப்பதனால் கீழ்மட்ட மக்களுக்கு எவ்வித நலன்களும் கிடைக்கப் போவதில்லையெனத் தெரிவித்துள்ள அதேவேளை, இணைய வரிகள் நீக்கப்படுவதனால் சில நலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அப்பாவி […]

Continue Reading

கூட்டு எதிரணிக்குள் பிளவில்லை – டலஸ் அழகப்பெரும

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் எந்த பிளவும் இல்லையென பாராளுமன்ற உறுப்பினர டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர ஒன்றிணைந்த எதிர்கட்சி குழுவிலிருந்து விலகிச் செல்லும் தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இந்த கருத்தை வெளியிட்டுள்ளதுடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை எந்தப் பிளவும் இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Continue Reading