இரு மாதங்களில் கலையவுள்ளது கிழக்கு மாகாணசபை

கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படுமென பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் காலங்கள் எங்களை மீண்டும் துரத்துகின்றது. கிழக்கு மாகாண சபை இன்னும் இரண்டு மாதங்களில் கலைக்கப்படவுள்ளதுடன், அதில் பல மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கிழக்கு மாகாணத்தினுடைய காலகட்டத்தில் கல்வி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒட்டு மொத்தமாக […]

Continue Reading

பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை அதிகரிப்பு

கிழக்கு மாகாண பட்டதாரிகளை சேவைக்கு உள்ளீர்க்கும் வயதெல்லையை 45 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஊடகப் பிரிவு இன்று விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக, தற்போது கிழக்கு மாகாண சபையினால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும் வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர். முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கிழக்கிலுள்ள 4,000ற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 1,700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நியமனங்களும் […]

Continue Reading

மூப்படைந்த பட்டதாரிகளும் அரசதுறை நியமனங்களில் உள்வாங்கப்படுவர் – கிழக்கு முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் 45 வயதுவரை மூப்படைந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச துறைகளில் நியமனம் வழங்குவதற்கு, மாகாண ஆளுநர் இணங்கியுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் இடையில் நேற்று ஆளுநர் இல்லத்தில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. குறித்த பேச்சுவார்த்தையில், கிழக்கு மாகாணத்தில் கடந்தகால யுத்தம் காரணமாக காலம்தாழ்த்தி தமது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இவர்களுக்கான நியமன வயதெல்லையை 45 வரை அனுமதிக்க ஆளுநர் […]

Continue Reading

கிழக்கு மாகாணத்தில் தீவிர டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளில் ஒரே தினத்தில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாலர் பாடசாலைகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிரமதானத்தில் 1856 பாலர் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 4062 ஆசிரியர்களும் பங்குபற்றியதுடன், பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர், பொலிஸார், முப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். […]

Continue Reading

விரைவில் சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் – கிழக்கு சுகாதார அமைச்சர்

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சுகாதார அபிவிருத்தி திட்டங்கள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பித்தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவின் கூட்டம் நேற்று அட்டாளைச்சேனை மத்திய குழுவின் தலைவரும், அமைச்சருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தின் மூலமே நமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் இடம்பெறுவதாகவும், குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் […]

Continue Reading

கிழக்கில் வேறுபாடின்றி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன!

இன, மத, பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து     உ​ரையாற்றுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அபிவிருத்திப் பணிகளில் எனக்கு கலந்து கொள்ளகிடைப்பதால் குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை […]

Continue Reading

கிழக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் தொடர் போராட்டம் நிறைவு!

கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144 பட்டதாரிகளுக்கு பரீட்சை அடிப்படையில் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கமையவே நேற்று (25) இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த இப்போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து முடித்து வைத்தனர். மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் […]

Continue Reading

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு!

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழியுறுத்தியுள்ளார். அதேவேளை இரு பிரதான கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதனை அவசியமில்லை என்பதாக […]

Continue Reading

போராட்டங்களுக்கு தீர்வு எப்போது?

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்குக் கிழக்கு மக்கள் கேட்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக வடக்குக் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. குறித்த போராட்டங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கமோ, மாகாண அரசாங்கமோ அக்கறைகொள்ளாத நிலையிலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு போராட்டம் இன்று 70ஆவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. 41 மீனவக் குடும்பங்களும், 97 விவசாயக் குடும்பங்களும் தங்களின் சொந்த நிலங்களை […]

Continue Reading

கிழக்கில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டிற்கான ஆளணி தேவையின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளதுடன், மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகத்தில் அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 4927 ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய […]

Continue Reading