இலங்கையின் பொருளாதாரத்தில் வளர்ச்சிநிலை

இந்நாட்டு பொருளாதாரம் சாதகமான முறையில் வளர்ச்சியடைந்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் இதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை உலக வர்த்தக அமைப்புடன் மேற்கொள்ளும் வர்த்தக பரிமாற்றங்களின் போது மிகவும் நட்பு ரீதியாகச் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தொழிற்துறை உற்பத்திகள் அதிகரிப்பு

கடந்த மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்திகள் 0.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மாதாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமைக்கு அமைவாக, தொழிற்துறை உற்பத்திகளில் மருந்து உற்பத்திகள் 19.5 சதவீதத்தாலும், உலோக மூலப்பொருட்கள், கலப்பு உலோக உற்பத்தி பொருட்கள் 12.7 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதவிர, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தவருடத்தில் உணவுத் துறை உற்பத்தியில் 2.3 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், […]

Continue Reading

ஜுன் மாத பணவீக்கத்தில் மாற்றமில்லை

இலங்கையின் வருடாந்த சராசரி பணவீக்கம் கடந்த ஜுன் மாதம் 6.1 சதவீதமாக மாற்றமின்றி பதிவாகியுள்ளது.   இது கடந்த 18 மாதங்களில் நிலவும் அதிகூடிய பணவீக்க புள்ளியாகும்.  2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக்கப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, தேசிய பணவீக்கமானது 3.8 சதவீதமாக நிலவியது.   அதேநேரம், நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த வளர்ச்சியின் அடிப்படையில், கடந்த மே மாதத்தைக் காட்டிலும் 1.3 சதவீத அதிகரிப்பை ஜுன் மாதம் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஜுன் மாதம் 123.4 புள்ளிகளாக […]

Continue Reading