முஸ்லிம் பாடசாலை விடுமுறையில் மாற்றம்

முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்று முதல் இரண்டாம் தவணைக்கான வழங்கப்படவுள்ள விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று (18) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவிருந்த போதிலும், எதிர்வரும் முதலாம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என்பதனால் இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இரண்டாம் தவணைக்காக எதிர்வரும் 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Continue Reading

மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை வழங்க தீர்மானம்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 58,000 அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு, சீருடைகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டாக, மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். கொழும்பு, சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading