இரண்டு நாட்கள் அவகாசம் – தேர்தல் திணைக்களம் அறிவுறுத்து

வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு கால அவகாசம் நாளை மறுதினம் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் வாக்காளர் பெயர் பட்டியலுக்கு கையொப்பமிடப்பட்டு இறுதி செய்யப்படும். இதன்பின்னர் எந்தவொரு தருணத்திலும் பெயர்களை உள்ளடக்க முடியாதென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லையாயின், எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அதனை சரிசெய்து கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கோரியுள்ளது.

Continue Reading

வாக்காளர் இடாப்பில் பெயர்களை உறுதிப்படுத்தவும்

2017ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உட்சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறில்லாவிட்டால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு 18 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளதுடன், 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை கிராம சேவகர் அலுவலகங்களில் அல்லது தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பரிசீலிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது. தமது அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, கிராம சேவகர் பிரிவை […]

Continue Reading

வாக்காளர் இடாப்பு மாதிரி தயாரிப்புப் பணிகள் நிறைவு

2017ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த வரைபு நகலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹமட் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அரசியல் கட்சிகளுக்குரிய நேர்முகப் பரீட்சை நிறைவுக்கு வருகிறது

அரசியல் கட்சிகளைப் புதிதாக பதிவு செய்யும் நேர்முகப் பரீட்சைகளை இந்த வாரத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் 95 புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பங்களை ஒப்படைத்துள்ளதாகவும், குறித்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப கடந்த வாரத்தினுள் நேர்முகப் பரீட்சைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading