வவுனியாவில் ஒரே நபர் மீது இரண்டாம் முறையும் வாள் வெட்டு!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (25) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது – 27) என்பவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகிய சத்தியசீலன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் […]

Continue Reading

கிழக்கில் வேலையில்லா பட்டதாரிகளின் தொடர் போராட்டம் நிறைவு!

கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144 பட்டதாரிகளுக்கு பரீட்சை அடிப்படையில் நியமனங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என்ற கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கமையவே நேற்று (25) இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த இப்போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து முடித்து வைத்தனர். மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் […]

Continue Reading

வீட்டுத்திட்டம் வழங்குமாறு ஒட்டுசுட்டானில் போராட்டம்!

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இதுவைரையில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2017) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுலன்புரி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றையும் கையளித்துள்ளர்.

Continue Reading