இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் இரு படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையின் விசாரணையின் பின்னர் யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக, இந்த வருடம் கைது செய்யப்பட்டு […]

Continue Reading

திருமலையில் 40 மீனவர்கள் கைது

திருகோணமலை மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட கடற்பகுதியில் மீன்படியில் ஈடுபட்ட கிண்ணியா மூதூர் பிரதேச மீனவர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அதேவேளை, 05 டிங்கி படகுகளும், 05 இயந்திரங்களும், 05 வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் திருகோணமலை சம்பூர், கெங்கை, உப்பாறு போன்ற பிரதேசங்களில் கரையில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Continue Reading