மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை வழங்க தீர்மானம்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 58,000 அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு, சீருடைகள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டாக, மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படவுள்ளதாகவும், மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்துள்ளார். கொழும்பு, சப்ரகமுவ மாகாணம் மற்றும் தென் மாகாணம் ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

இராணுவ கவச வாகனங்களில் கொண்டு செல்லப்படும் சடலங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் சடலங்களைக் கொண்டு செல்வதற்கும், பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்பதற்கும் இராணுவ கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான 15பிஆர் மற்றும் டபிள்யூ.எம்.இஸட் ரக இராணுவ கவச வாகனங்கள் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேவேளை, மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள குறித்த இராணுவ கவச வாகனங்கள் ஆழமற்ற பகுதிகளில் பயணிக்க கூடியதெனத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 169 வரை உயர்வடைந்துள்ளது. மேலும் 104 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 88 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்வடைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களால் 28 ஆயிரத்து 586 குடும்பங்களைச் சேர்ந்த 04 லட்சத்து 71 ஆயிரத்து 542 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீரற்ற காலநிலையால் 412 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில், 04 ஆயிரத்து 266 […]

Continue Reading

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாதைகளை சீரமைக்கும் திட்டம் ஆரம்பம்

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாதைகளை சீர்திருத்துவதற்கான திட்டமொன்றை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக களுத்துறை, காலி, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதை அமைப்பில் ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பான தகவல்களை மாகாண பணிப்பாளர்கள் ஊடாக பெற்ற வண்ணம் உள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனுடன் அனர்த்தங்களால் சேதமான பாதைகள் தொடர்பான தகவல்களை, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 1968 மற்றும் 1969 ஆகிய அவசர தொலைபேசி […]

Continue Reading