பங்களாதேஷின் நிதியுதவி ஜனாதிபதியிடம் கையளிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. பங்களாதேஷின் நிதியுதவிக்கான காசோலை, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லாவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் பங்களாதேஷ_க்கும் இடையிலான இருதரப்பு […]

Continue Reading

யாழில் இருந்து மனிதாபிமான ரயில் பயணம் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த விஷேட ரயிலில் 05 பொதிகள் ஏற்றுவதற்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று காலை காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து அங்கு மக்களால் கொடுக்கப்பட்ட பொருட்கள் ரயில் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, 7.00 மணியளவில் தனது அடுத்த பயணத்தை ஆரம்பித்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, […]

Continue Reading

ஆசிய அபிவிருத்தி வங்கி 2 மில்லியன் நிதியுதவி

நாட்டில் கடந்த சில நாட்களாக தாக்கம் செலுத்திய அனரத்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நேற்று நிதியமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்காக வதிவிட காரியாலத்தின் பிரதானி டாறாடேரோ ஹயாஷி மற்றும் இலங்கை சார்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆசிய […]

Continue Reading

கழிவுகளை அகற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்தல் தொடர்பாக, ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த ஆலோசனையை வழங்கியுள்ளதுடன், கழிவு முகாமைத்துவம் தொடர்பான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கழிவு முகாமைத்துவ செயற்றிட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். […]

Continue Reading

வரவு குறைவடைந்துள்ளது

அனர்த்த நிலை காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று திறக்கப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. களுத்துறை கல்வி வலயத்தின் பணிப்பாளர் பிரியானி முதலிகே இதுதொடர்பில் தெரிவிக்கையில், வெள்ளம் காரணமாக மாணவர்களின் வீடுகள் மற்றும் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

யாழிலிருந்து மனிதாபிமான ரயில் பயணம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு நிவாரணங்களை ஏந்திய மனிதாபிமான ரயில் ஜுன் 10ஆம் திகதி காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. இயற்கை சீற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும், அந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க […]

Continue Reading

54 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிப்படைந்த மற்றும் அகதி முகாம்களாக உள்ள 54 பாடசாலைகள் இன்று திறக்கப்படமாட்டாதென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஏனைய சகல பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் மூடப்பட்ட சகல பாடசாலைகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. தென்மாகாணத்தில், அகதி முகாம்களாக உள்ள 10 பாடசாலைளும் பாதிக்கப்பட்ட 29 பாடசாலைகளும் தவிர, ஏனைய பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் அகதி முகாம்களாக உள்ள 15 […]

Continue Reading

உயிரிழப்புகள் 224 ஆக அதிகரிப்பு

நாட்டில் கடந்தவாரம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளதுடன், 78 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 72 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 376 குடும்பங்களை சேர்ந்த 06 லட்சத்து 98 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதிக உயிரிழப்புகள் இரத்தினபுரி மாவட்;டத்தில் […]

Continue Reading

சப்ரகமுவ மாகாணத்தில் 14 பாடசாலைகளைத் தவிர்ந்த பாடசாலைகள் 5ஆம் திகதி ஆரம்பம்

இயற்கை அனர்த்தம் காரணமாக சப்ரகமுவ மாகாணத்தில் மூடப்பட்ட பாடசாலைகளில் 14 பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 5ஆம் திகதி திங்கட்கிழமை திறக்கப்படுமென சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மற்றும் அகதிகளாகவுள்ள 14 பாடசாலைகள் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நிவித்திகலை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரிபத்கலை வித்தியாலயம், பாராவத்தை தமிழ் வித்தியாலயம், பேபொட்டுவ வித்தியாலயம், ஏலபாத்த பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பலாவெல தமிழ் வித்தியாலயம், […]

Continue Reading

சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் அன்பளிப்பு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, சீன பௌத்த சங்கம் 22 மில்லியன் ரூபாய் நிதி அன்பளிப்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்துக் கையளித்துள்ளது. சீன அரசாங்கமானது தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் இத்தகைய ஒத்துழைப்புக்களினால் இருநாட்டிற்கும் இடையிலான நீண்டகால தொடர்புகள் மேலும் விருத்தியடைவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை அனர்த்தங்களைச் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீன அரசாங்கம் உதவிகளை வழங்குவதையிட்டு, தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். அதேபோல் சர்வதேச ரீதியில் கிடைக்கும் நிதி […]

Continue Reading

350 மில்லியன் ரூபாவை வழங்கியது அமெரிக்கா

கடந்தவாரம் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மணிசரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 350 மில்லியன் ரூபா நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கிஷோப் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்றுச் சந்தித்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்நிகழ்வின் போது, கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதுவர், தேவைப்படும் போதெல்லாம் அமெரிக்க மக்களும் இலங்கை மக்களும், எப்போதும் அருகருகே இருப்பார்களெனத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

பாதிப்புக்குள்ளானவர்களில் 39,092 பேர் இன்றும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட 11,203 குடும்பங்களின் சுமார் 39,092 பேர் வரை பாதுகாப்பான இடங்களில் தற்போதும் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மொத்தமாக 239 பாதுகாப்பான இடங்களில் அவர்கள் தங்கியுள்ளனர். இதில், இரத்தினபுரி மாவட்டத்தில் 160 பாதுகாப்பான இடங்களும், களுத்துறை மாவட்டத்தில் 18 பாதுகாப்பான இடங்களும், மாத்தறை மாவட்டத்தில் 17 இடங்களும், கொழும்பு மாவட்டத்தில் 15 இடங்களும், நுவரெலியா மாவட்டத்தில் 12 இடங்களும், காலி மாவட்டத்தில் 11 இடங்களும், கண்டி, […]

Continue Reading