உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு

சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலையை இன்று முதல் நடைமுறைக்குவரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனைவிட குறைந்த அளவுடைய பொலிதீன் பயன்பாடு அல்லது உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறித்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த உலர் உணவுப் பொருட்களை விரைவாக உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அப்பிரதேச மக்களுக்கான குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading