வடக்கு, கிழக்கின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக தேரர்கள் குழு!

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பௌத்த தேரர்கள் அடங்கிய குழுவொன்று விரைவில் அப்பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்கிரிய மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களை உள்ளடக்கிய குழுவினரே இவ்விஜயத்தில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

ஜாதிக ஹெல உறுமயவை வீழ்த்த மஹிந்த திட்டம்

கலகொட அத்தே ஞானசார தேரரை பயன்படுத்தி, ஜாதிக ஹெல உறுமய கட்சியை வீழ்த்துவதற்கான செயற்பாட்டை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஞானசார தேரரை தாம் மறைத்து வைத்துள்ளதாக கூறப்படும் கருத்துக்களில் எந்ததொரு உண்மையில் இல்லையெனத் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், மஹிந்த ராஜபக்ஷவின் குழுவினர், தங்களைப் பற்றி பொய்யான கருத்துக்களை […]

Continue Reading

ஞானசார தேரருக்குப் பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்யுமாறு உத்தரவிட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமையினாலேயே அவரை கைது செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Continue Reading

ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்?

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை படுகொலை செய்வதற்கு முயற்சிப்பதாக குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு நேற்று தெரியப்படுத்தியுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் சிலர், ஞானசார தேரரை படுகொலை செய்துவிட்டு, நாட்டில் மதங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு முயற்சிப்பதாக முறைப்பாடு கிடைத்துள்ளதால், அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் திலன்ன குமார வித்தானகே, பொலிஸ்மா அதிபரிடம் செய்திருந்த முறைப்பாட்டுக்கு […]

Continue Reading

ஞானசார தேரரைக் கைது செய்ய சுற்றிவளைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமையில் குறுக்கிட்டமை, இனங்களுக்கிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழேயே அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அவரைக் கைது செய்வதற்காக, 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை விட்டு அவர் தப்பிச்செல்ல முடியாத வகையில், தடையுத்தரவை நீதிமன்றத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading