ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கு இரண்டு வருட ஆயுளா?

எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இல்லாமல் போகும் அபாயமுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இலங்கைக்கு கிடைத்துள்ள ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைமூலம் கிடைக்கும் பிரதிபலனின் நூற்றுக்கு 50 வீதத்தை தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அது இப்போது பிரச்சினையாகி இருப்பதாகவும் இதன் காரணமாக எதிர்வரும் இரண்டு வருடங்களில் ஜீ.எஸ்.பி பிளஸ் இல்லாது போகும் அபாயம் இருப்பதாகவும் உலக தொழிற்சங்கத்தின் இலங்கை குழுவின் உதவி தலைவர் எண்டன் மாகஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே […]

Continue Reading

ஜீ.எஸ்.பி வரிச்சலுகை பிரேரணை தோல்வி

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து முன்வைக்கப்பட்ட யோசனை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்கக் கூடாதெனத் தெரிவித்து அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற நிலையில், இதற்கு எதிராக 436 வாக்குகளும், ஆதரவாக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், 22 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் யோசனை

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்க எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அப்பாராளுமன்றத்தின் 55 உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றே குறித்த யோசனையை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும், ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரைகளை செயற்படுத்தல் குறித்து இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். இதற்கமைய, ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவதை தவிர்க்குமாறு ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்துமாறு அந்த யோசனையில் கோரப்பட்டுள்ளது. கடந்த ஐக்கிய […]

Continue Reading