குருகுலராஜா பதவி இராஜனாமா

வடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா  தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார். வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமா கடிதத்தினை சமர்ப்பித்துள்ளார். ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டுமென அந்த விசாரணைக்குழு பரிந்துரைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, முதலமைச்சர் இரு […]

Continue Reading

இராஜினாமா செய்தார் குருகுலராசா

வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் இராஜினாமா கடிதத்தை மாவை சேனாதிராஜா மறுத்துள்ள போதிலும் பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 04 அமைச்சர்களின் ஊழல் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் மூவர் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டதுடன் அந்தக்குழு, விசாரணை மேற்கொண்டு அறிக்கையை வடமாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணைக்குழுவால் […]

Continue Reading