முதலாம் திகதி விடுமுறையில் மாற்றமில்லை

ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் திகதியில் மாற்றம் ஏற்பட்டாலும் அதனை முன்னிட்டு அடுத்த மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்படமாட்டாதென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. ஹஜ் பெருநாளை எதிர்வரும் 2ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வழங்கப்பட்ட விடுமுறை இரத்து செய்யப்படமாட்டாது எனவும், செப்டெம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை என்பதால் அன்றைய தினத்தில் மேலதிக விடுமுறை தேவையில்லை எனவும் அமைச்சின் செயலாளர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

Continue Reading

செப்டெம்பர் 2 ஹஜ் பெருநாள்

நாட்டின் எந்தப் பகுதியிலும் துல் ஹஜ் மாத தலைபிறை தென்படாமையினால் துல் கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசல் தீர்மானித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 2 ஆம் திகதி சனிக்கிழமை ஹஜ் பெருநாளை இலங்கைவாழ் முஸ்லிம் மக்கள் கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று இடம்பெற்ற பிறைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading