இலங்கை கடல்சார் கேந்திரநிலைய முக்கியத்துவத்தை தக்கவைக்க சிறந்தவழி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பொது தனியார் ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமையை, இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது. குறித்த சம்மேளனம் விடுத்துள்ள விஷேட அறிக்கையொன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த துறைமுகம் சீன நிறுவனம் ஒன்றுடனான உடன்படிக்கை ஊடாக அபிவிருத்தி செய்யப்படுவதன் மூலம், இலங்கை கடல்சார் கேந்திரநிலைய முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்ள சிறந்த வழி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நடவடிக்கை ஊடாக, அதிக வெளிநாட்டு முதலீடுகளையும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகியுள்ளது எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Continue Reading

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்; கூட்டு எதிரணியின் கோரிக்கை

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பந்துல குணவர்த்தன மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகிய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர். குறித்த உடன்படிக்கையிலுள்ள பாதிப்புத் தன்மை தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நேற்று (28) நாடாளுமன்றத்தில் தமக்கு வாய்ப்பளிக்கப்படவில்லையென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை அனுமதிப் பத்திரத்தில் ஹம்பாந்தோட்டைத்துறை உடன்படிக்கை தொடர்பில் அனுமதி பெற்ற விடயங்கள் மற்றும் தற்போது அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் சுற்றாடலுக்கு […]

Continue Reading

ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம்; ஒப்பந்தம் கைச்சாத்து (Photos)

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வர்த்த செயற்பாடுகள் தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் குறித்த உடன்படிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மற்றும் சீன வர்த்தக துறைமுக தனியார் நிறுவனம் என்பன இந்த வர்த்தக நடவடிக்கைக்கு உரிமை கோருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading