தடைசெய்யப்பட்ட கிருமிநாசினி வைத்திருந்தவர் கைது

தடைசெய்யப்பட்டுள்ள கிருமி நாசினி மற்றும் கிருமி நாசினியைத் தாயாரிக்கும் இயந்திரங்களுடன் ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான, 119க்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, திம்புள்ளை, பத்தனை பொலிஸார், கொட்டகலை ரயில்நிலையத்தில் வைத்து, நேற்று அவரை கைது செய்தனர். ரயில் நிலையத்துக்கு, சந்தேகத்திற்கிடமான பொதிகள் வந்திறங்கியுள்ளதாகவும், அவை யாழ்ப்பாணத்திலிருந்தே வந்துள்ளதாகவும் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரயில் நிலையத்துக்கு திம்புள்ளை பத்தனை பொலிஸார் விரைந்துள்ளனர். அப்போது, அந்தப் பொருட்கள் லொறியொன்றில் ஏற்றப்பட்டு […]

Continue Reading

இந்திய உயர்ஸ்தானிகர் ஹற்றன் விஜயம் – ஏற்பாடுகள் தொடர்பில் நேரில் ஆராய்வு

இந்திய அரசின் நிதி உதவியில் நவீன வசதிகளுடன் டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தைத் திறந்து வைப்பதற்காக மலையகத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் முன்னேற்பாடுகளை ஆராய்வதற்காகவும், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்து மற்றும் இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் இன்று கெலிஹொப்டர் மூலம் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளனர். இவர்களை ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய […]

Continue Reading

மின்னல் தாக்கியதால் பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கியதில் பாதிப்புக்குள்ளான பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (04) மாலை 4.00 மணியளவில் ஹட்டன், எபோட்சிலி மாக்கஸ் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளை கடும் மழையுடன் மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இதன்போது, பாதிப்படைந்த நால்வரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Continue Reading