இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலேரியா நுளம்புகள் பரவும் சாத்தியம் உள்ளதாக தெரிவிப்பு!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் எதிர்வு கூறியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் […]

Continue Reading

தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டண கட்டுப்பாடு

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு கட்டண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. குருதி பரிசோதனைக்கு 250 ரூபாவும், டெங்கு தொற்று நோய்த் தாக்கம் நேர்மறையா அல்லது எதிர்மறையா என பரிசோதிப்பதற்கு 1000 ரூபாவும் அறவிடப்பட வேண்டுமென அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இந்த கட்டண கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

கட்டாரின் அறிவுறுத்தல் தொடர்பில் இலங்கையின் தெளிவூட்டல்

கட்டார் அரசாங்கத்தினால் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் விளக்கமளித்துள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதனை தவிர்க்குமாறு கட்டார் அரசாங்கத்தினால் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வெளவிவகார அமைச்சின் செயலாளருக்கு விடயங்களை கடிதமொன்றின் மூலம் தெளிவூட்டியுள்ளார். இலங்கைக்குள் ஏ.எச்1.என்1 வைரஸ் பரவுகின்றமையானது, அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை எனவும், ஏ.எச்1.என்1 வைரஸ் உலக நாடுகளில் பரவும் சாதாரண நோய் எனலும் சுகாதார அமைச்சின் செயலாளர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்குள் தற்போது ஏ.எச்1.என்1 […]

Continue Reading