தலைக்கவசம் தொடர்பில் புதிய ஒழுங்கு விதிகள்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தை தயாரிக்கும் விதம் தொடர்பிலான, புதிய ஒழுங்கு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முகத்தை முழுவதும் மறைக்கும் தலைக்கவசத்தை அணிய, பொலிஸார் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ள அதேவேளை, உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் புதிய ஒழுங்கு விதிகள் குறித்து ஆராய்ந்து தகவலளிக்க கால அவகாசம் வழங்குமாறு, முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணி இதன்போது கோரியுள்ளார். இதற்கமைய, இந்த மனு மீதான […]

Continue Reading

முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு எதிரான தீர்மானம் இடைநிறுத்தம்?

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை பயன்படுத்துவதை தடைசெய்ய முன்னெடுத்த தீர்மானத்தை இடைநிறுத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பல, போக்குவரத்து அமைச்சில் முன்னெடுத்த கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading

தலைக்கவசம் அணிவது கட்டாயம்

முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் புதிய சட்ட விதிமுறைகளைக் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் சிசிர கோதாகொட தெரிவித்ததுடன், முச்சக்கரவண்டிகளில் மீற்றர் பயன்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டிகள் தொடர்பாக உள்ளூராட்சி சபை மற்றும் பொலிஸ் நிலையத்தில் கட்டாயமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் […]

Continue Reading